பக்கம் எண் :

802
 
நின்றவன் நின்றவன் நீதி

நிறைந்தவர் தங்கள்பால்

அன்றவன் அன்றவன் செய்யருள்

ஆமாத்தூர் ஐயனே.

5

461. காண்டவன் காண்டவன் காண்டற்

கரிய கடவுளாய்

நீண்டவன் நீண்டவன் நாரணன்

நான்முகன் நேடவே

ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்

தூரையும் எனையுமாட்

பூண்டவன் பூண்டவன் மார்பிற்

புரிநூல் புரளவே.

6



சிலவாகிய பிச்சைக்கென்று தெருவிற் சென்றவன்; நீதியிற் சிறிதும் குறையாதவரிடத்தில் நிலைபெற்று நின்றவன்; தன்னை அடைந்தார்க்கு அருள்செய்தல், அடைந்த அன்றேயாகின்றவன்.

கு-ரை: "செய் அருள்" என்றதனை, 'அருள்செய்' என மாற்றியுரைக்க. "செய்" முதனிலைத் தொழிற்பெயர்.

அன்று, அம்மை - வரும் பிறப்பு என்று உரைத்தல். ஈண்டைக்கு ஏலாமையறிக.

6. பொ-ரை: திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள தலைவன், தன் அடியவர்கட்கு எளிதில் காணப்பட்டவன்; திருமாலும் பிரமனும் தேட, அவர்களால் காணுதற்கரிய கடவுளாய் நீண்டவன்; ஆமாத்தூரையும் ஆண்டவன்; என்னையும் ஆளாக வைத்து ஆண்டவன்; மார்பில் முப்புரி நூலைப் புரளப் பூண்டவன்.

கு-ரை: 'ஆமாத்தூர் ஐயன்' என்பதை, மேலைத் திருப்பாடலினின்றும் வருவிக்க.

"ஆண்டவன் ஆண்டவன்" என்பதை, "என்னையும் ஆள்" என்றதனோடுங் கூட்டுக.