462. | எண்ணவன் எண்ணவன் ஏழுல | | கத்துயிர் தங்கட்குக் | | கண்ணவன் கண்ணவன் காண்டும்என் | | பாரவர் தங்கட்குப் | | பெண்ணவன் பெண்ணவன் மேனியொர் | | பாகமாம் பிஞ்ஞகன் | | அண்ணவன் அண்ணவன் ஆமாத் | | தூர்எம் மடிகளே. | | 7 |
463. | பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந் | | தென்னைப்போ கவிடா | | மின்னவன் மின்னவன் வேதத்தி | | னுட்பொரு ளாகிய | | அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் | | ஐயனை ஆர்வத்தால் | | என்னவன் என்னவன் என்மனத் | | தின்புற் றிருப்பனே. | | 8 |
7. பொ-ரை: திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன் ஏழுலகத்திலும் உள்ள உயிர்கட்குக் கருத்தாய் உள்ளவன்; தன்னை, 'காண்போம்' என்று அன்பால் முயல்கின்றவர்கட்குக் கண்ணாய் உள்ளவன்; திருமேனி ஒரு பாகம் பெண்ணாகியவன்; பொருந்திய தலைக்கோலத்தை உடையவன்; அடையத் தக்கவன். கு-ரை: 'கருத்தாய் உள்ளவன்' என்றது, அறிவை உண்டாக்குதலையும், 'கண்ணாய் உள்ளவன்' என்றது, அவ்வறிவிற்குப் பொருள்களைப் புலப்படுத்துதலையும் குறித்தன. "தங்கள்" இரண்டும், சாரியை. 'அவர்' பகுதிப்பொருள் விகுதி. 'ஏழுலகத்துயிர் தங்கட்கும்' என்னும் முற்றும்மை, தொகுத்தலாயிற்று. 8. பொ-ரை: திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள தலைவன், அடியார்களுக்குப் பொன்போல்பவனாய் உள்ளவன்; பொன்னைக் கொடுத்து என்னைத் தன்னினின்றும் நீங்கவொட்டாது பிணித்துக் கொண்ட ஒளிவடிவினன்; வேதத்தின் உட்பொருளாய் உள்ள அத் தன்மையை உடையவன்; எனக்கு உரிமையுடையவன்; அவனை, யான் என்மனத்தில் அன்பால் நினைந்து இன்பமுற்றிருப்பேன்;
|