பக்கம் எண் :

804
 
464.தேடுவன் தேடுவன் செம்மலர்ப்

பாதங்கள் நாள்தொறும்

நாடுவன் நாடுவன் நாபிக்கு

மேலேயொர் நால்விரல்

மாடுவன் மாடுவன் வன்கை

பிடித்து மகிழ்ந்துளே

ஆடுவன் ஆடுவன் ஆமாத்

தூர்எம் மடிகளே.

9

465.உற்றனன் உற்றவர் தம்மை

ஒழிந்துள்ளத் துள்பொருள்

பற்றினன் பற்றினன் பங்கயச்

சேவடிக் கேசெல்ல



கு-ரை: "மின்" என்றது, அதன் ஒளியைக் குறித்தது. "ஆர்வத்தால்" என்புழி, 'நினைந்து' என்பது வருவிக்க. "அன்பினால் இன்பம் ஆர்வார்" என்ற சேக்கிழார் திருமொழியை (தி. 12 தடுத். புரா. 196) இங்கு நினைவு கூர்க.

9. பொ-ரை: யான், திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனது திருவடிகளை நாள்தோறும் தேடுவேன்; அவனை, உந்திக்குமேல் நால்விரல் அளவில் உள்ள இருதயத்தில் நினைப்பேன்; வெளியில் சென்றால் வலிய கையால் பிடித்து மகிழ்ந்து உள்ளே சேர்ப்பேன்; அவனுக்கு ஏற்புடையன ஆகும்படி கூத்துக்களை ஆடுவேன்.

கு-ரை: 'நாபிக்குமேலே ஓர் நால்விரலில் நாடுவன்' என்றது, அகப்பூசையைக் குறித்தவாறு. "காயமே கோயிலாக" என்னும் திருநேரிசையுள் (தி. 4 ப. 76 பா. 4) திருநாவுக்கரசு சுவாமிகளும், அகப்பூசையைக் குறித்தருளினார். 'மாட்டுவன்' என்பது, எதுகைநோக்கி, இடைக் குறைந்து நின்றது. வெளியிலே உள்ள இறைவன் சத்தியை வாங்கிக் கையை முட்டியாகப் பிடித்து இருதயத்துள் சேர்த்தல் வழிபாட்டு முறை; இவ்வாறு பிடிக்குங் கையை, 'சங்கார முத்திரை' என்ப.

10. பொ-ரை: யான், மீட்டும் மீட்டும் பிறவாமைப் பொருட்டு, உற்றாரை நீங்கி, உள்ளத்தில் உள்ள பொருளை அடைந்தேன்; திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனது, தாமரை மலர் போலும் செவ்விய திருவடியிடத்தே செல்ல அவற்றைத் துணையாகப்