| அற்றனன் அற்றனன் ஆமாத்தூர்மேயான் | | அடி யார்கட்காள் | | பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் | | பெயர்த்தும்பிற வாமைக்கே. | | 10 |
466. | ஐயனை அத்தனை ஆளுடை | | ஆமாத்தூர் அண்ணலை | | மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு | | ளான விமலனை | | மையனை மையணி கண்டனை | | வன்றொண்ட னூரன்சொல் | | பொய்யொன்று மின்றிப் புலம்புவார் | | பொற்கழல் சேர்வரே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
பற்றினேன்; அதனால் துன்பங்கள் நீங்கப்பெற்றேன்; அதன்பின். அவன் அடியவர்க்கு அடியனாகும் பேற்றையும் பெற்றேன். கு-ரை: "உள்ளத்து உள்பொருள்" என வேறொன்று போல அருளியது, பொதுமையில் உற்றமையை உணர்த்தற்கு. அறுதலுக்கு, 'துன்பம்' என்னும் வினைமுதல் வருவிக்க. "சேவடிக்கு" என்றதனை உருபு மயக்கமாக்கி, 'செல்லல் அற்றனன்' எனப் பாடம் ஓதுதலுமாம். 11. பொ-ரை: யாவர்க்கும் தலைவனும், தந்தையும், என்றும் உள்ளவனும், மெய்ம்மையான உள்ளம் உடையவர்க்கு அநுபவப் பொருளாய் விளங்குகின்ற தூயவனும், திருவருள் மேகமானவனும், மைபோலும் அழகிய கண்டத்தை உடையவனும் ஆகிய திருவாமாத்தூரை ஆளுதலுடைய இறைவனை, வன்றொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய பாடல்களை, வஞ்சனை சிறிதும் இன்றிப் பாடுகின்றவர், அப்பெருமானது பொன்போலும் திருவடிகளை அடைவர். கு-ரை: "சொல்" என்றது முதனிலைத் தொழிற்பெயராய் நின்று இரண்டனுருபுகளை முடித்து, ஆகுபெயராய், சொல்லப்பட்ட பாடலை உணர்த்திற்று. "முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா மின்சொலினதே யறம்" என்னும் திருக்குறளில் (93), "நோக்கி" என்ற வினை யெச்சம், 'இன்சொல்' என்றதனோடு முடிந்தவாறறிக. ஒலித்தலை, 'புலம்பல்' என்றல், பான்மை வழக்கு. இனி, 'அன்பினால் அழுது பாடுவார்' என்று உரைத்தலுமாம்.
|