520. | சங்கலக்குந் தடங்கடல்வாய் | | விடஞ்சுடவந் தமரர்தொழ | | அங்கலக்கண் தீர்த்துவிடம் | | உண்டுகந்த அம்மானை | | இங்கலக்கும் உடற்பிறந்த | | அறிவிலியேன் செறிவின்றி | | எங்குலக்கப் பிரிந்திருக்கேன் | | என்ஆரூர் இறைவனையே. | | 3 |
521. | இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப் | | பிறந்தயர்வேன் அயராமே | | அங்ஙனம்வந் தெனையாண்ட | | அருமருந்தென் ஆரமுதை |
மன்மதனது வெற்றிப் பாட்டினை, கந்த புராணத்துக் காமதகனப் படலத்துள், அவனே கூறுமாறாய் வந்த வற்றான் அறிக. 3. பொ-ரை: வருத்துதலைச் செய்கின்ற உடலிற்பட்டு இவ்வுலகிற் பிறந்த அறிவில்லேனாகிய யான், தேவர், சங்குகள் விளக்குகின்ற பெரிய கடலிடத்துத் தோன்றிய ஆலகாலவிடம் தம்மைச் சுடுகையினாலே அடைக்கலமாக வந்து வணங்க, அப்பொழுதே அவரது துன்பத்தை நீக்கி, அவ்விடத்தை உண்டு, அவரை விரும்பிக் காத்த பெரியோனாகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப் பிரிந்து எவ்விடத்து இறத்தற்பொருட்டு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன். கு-ரை: "சங்கு" என்றதன்பின், 'அலங்கும்' என்பது, 'அலக்கும்' என வலித்தலாயிற்று. "இங்கு" என்றதன்பின், 'அலப்பிக்கும்' என்பது குறைந்து நின்றது; 'அலைக்கும்' என்பது, திரிந்தது என்றலுமாம். 4. பொ-ரை: இவ்வுலகில் வந்து, துன்பத்தைத் தருகின்ற பிறப்பிற் பிறந்து மயங்குவேனாகிய யான், அங்ஙனம் மயங்காதவாறு நான் பிறந்திருந்த ஊரிற்றானே வந்து என்னை அடிமையாக்கிக்கொண்ட அரிய மருந்தும், அமுதும் போல்பவனும், வெம்மையான நெருப்புப் போலும் சிறந்த திருமேனியை உடையவனும், மான் பொருந்திய
|