| வெங்கனல்மா மேனியனை | | மான்மருவுங் கையானை | | எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன் | | என்ஆரூர் இறைவனையே | | 4 |
522. | செப்பரிய அயனொடுமால் | | சிந்தித்துந் தெரிவரிய | | அப்பெரிய திருவினையே | | அறியாதே யருவினையேன் | | ஒப்பரிய குணத்தானை | | இணையிலியை அணைவின்றி | | எப்பரிசு பிரிந்திருக்கேன் | | என்ஆரூர் இறைவனையே. | | 5 |
கையை உடையவனும் ஆகிய எனது திருவாருர் இறைவனைப் பிரிந்து, நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன். கு-ரை: "செங்கனல்" என வந்தமையின், 'இங்கனம், அங்ஙகனம், எங்கனம்' என்பனவே பாடம் என்பாரும் உளர். 5. பொ-ரை: நீக்குதற்கரிய வினையையுடையேனாகிய யான். சொல்லுதற்கரிய பெருமையையுடைய, 'பிரமதேவனும், திருமாலும்' என்னும் அவர்தாமும் நினைத்தற்கும், காண்பதற்கும் அரிய அத்தன்மைத்தாய பெரிய செல்வமாய் உள்ளவனும், பிறர் ஒருவரது குணமும் நிகர்த்தல் இல்லாத அருட்குணங்களை யுடையவனும்., பிறர் ஒருவரும் தனக்கு நிகரில்லாதவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை நினைத்தலும், அடைதலும் இன்றிப் பிரிந்து, எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன். கு-ரை: மக்களினும் பெருமையுடைய தேவர்களினும் பெருமை யுடையராகலின், 'செப்பரிய அயனொடுமால்' என்றார். 'அறிதல்' என்றது, இங்கு நினைத்தலின் மேற்று. "அருவினையேன்" என்றது, 'பிரிந்திருப்பின் அன்னேனாவேன்' என்றதாம். "ஒப்பரிய" என்ற எச்சம், "குணம்" என்றதனோடு முடிந்தது. அக்குணங்கள் தாம் எட்டென்பது நன்கறியப்பட்டது.
|