553. | ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றால் | | யாவ ராகில்என் அன்புடை யார்கள் | | தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற் | | சொல்லு வாரையல் லாதன சொல்லாய் | | மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண் | | கொள்வ தேகணக் குவ்வழக் காகில் | | ஊன்று கோலெனக் காவதொன் றருளாய | | ஒற்றி யூரெனும் ஊருறை வானே. | | 4 |
கூறியது, அடியவர்க்குத் தீங்கு விளைவியாமையைக் குறிக்க வென்க. 'சலசல முரல' என்பதே பாடல் போலும்! கடல் எல்லா மணிகட்கும் உறைவிடமாதலின், அலைகள் அவற்றை வரன்றி வருவவாயின என்க. 'ஓங்கும்' என்பது குறுகிநின்றது. 4. பொ-ரை: "ஒற்றியூர்" என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே. 'தாய் பெற்றதனால் கொள்ளப் பட்டதொரு சுற்றம் என்பது ஒருபொருளன்று; அன்புடையவர்கள் யாராய் இருப்பினும் என் என்கின்ற இம்முறைமை பற்றி, நீ உன் னிடத்து அன்புசெய்பவரை, உனது இயற்கை வடிவம் அவர்கட்குப் புலனாகுமாறு வெளிநின்று ஆட்கொண்டுவிட்டால், அதன்பின் உன் பெயரையே சொல்லிக் கொண்டிருப்பவரை, நீ ஒரு ஞான்றும் கடுஞ்சொற்சொல்லுவாயல்லை; அங்ஙனமாகவும், மூன்று கண்களை யுடையையாகிய நீ உன் அடியேனது இரண்டு கண்களைப் பறித்துக் கொள்வது, யான் செய்த குற்றங் காரணமாக நீதி நூல்களில் உள்ள முறைமையே யாகில், எனக்கு உதவியாய் நிற்பதோர், ஊன்று கோலையேனும் அளித்தருள். கு-ரை: மக்கட்கு 'உறவுமுறை என்பது அவர்களை ஈன்ற தாயோடு ஒட்டியே வருவதாகலானும், அவ்வுறவுமுறைமை இல்லாதார்தாமும் அன்புடையராய வழி, அவரினும் சிறந்து நிற்றல் இயல்பாதலானும், அன்பை முதன்மையாகக் கொள்ளுதலே சிறந்த முறைமையாக வருதலை எடுத்தோதுவார், இவ்வாறருளிச்செய்தார். "ஈன்று" என்றதனால், 'தாய்' என்பதே தானே வந்து இயைந்தது. "ஈன்று" என்றது, 'ஈன்றதனால்' எனப் பொருள் தந்தது,
|