552. | கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே | | கட்டி யேபலர்க் குங்களை கண்ணே | | அங்கை நெல்லியின் பழத்திடை யமுதே | | அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன் | | சங்கும் இப்பியுஞ் சலஞ்சல முரல | | வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி | | ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும | | ஒற்றி யீரெனும் ஊருறை வானே. | | 3 |
காரணமாக, இம் மண்ணுலகிற் பிறந்தேன்; பிறந்து உனக்கு ஆளாகி, இடையே மாதரை விரும்பி மணந்தேனாயினும், உன் திருவடியை மறந்திலேன்; பிறவற்றைச் செய்யத் தவறினேனாயினும், திருவடிக்குச் செய்யும் அடிமையில் இடைவிடாது நின்றேன்; என்ன செய்தற் பொருட்டு அவற்றை நான் இப்பொழுது எடுத்துரைப்பேன்! இத் துன்பமெல்லாம், என்காதலுக்கு இடமாய் நின்ற சங்கிலி காரணமாக நீ செய்வனவேயாகும். கு-ரை: 'ஆதலின், நீக்கியருள்' என்பது குறிப்பெச்சம், 'கட்டம்' என்பது, அதற்கு ஏதுவாகிய வினைகளைக் குறித்தது. எட்டு மூர்த்தி - அட்ட மூர்த்தம். 'எடுத்துரைத்தலாற் பயன் என்' என்றபடி. 'பெட்டேன்' என்பது, 'பெட்டன்' என நின்றது; அதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. 3. பொ-ரை: கங்கை பொருந்தியுள்ள சடையையுடையவனே, அடியார்கட்குக் கரும்பும், கட்டியும், அகங்கையிற்கிடைத்த நெல்லிக் கனியில் உள்ள அமுதமும் போல இனிமையைத் தருகின்றவனே, அனைவர்க்கும் பற்றுக்கோடாய் உள்ளவனே, தந்தையே, சங்குகளும், சிப்பிகளும், சலஞ்சலம் என்னும் சங்குகளும் ஒலிக்க, 'வயிரம், முத்து, பிற மணிகள், பொன்' என்பவற்றை வாரிக்கொண்டு, பெரிய கடலின் கண் உயர எழுகின்ற அலைகள் வந்து உலவுகின்ற, 'ஒற்றியூர்' என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, நீயே எனக்குத் துன்பஞ் செய்வையாயின், அதனை நான் யாரிடம் நீக்குமாறு எடுத்துச்சொல்வேன்! கு-ரை: 'கங்கை தங்கிய சடையையுடைமை, இருமனைவியரை மணந்து ஒரு மனைவியிடத்துக் கரவாய் நிற்றல் இயல்பாதலைக் காட்டும் குறிப்பினதன்றோ'என்றபடி. கரும்பு முதலியனவாகக்
|