பக்கம் எண் :

871
 
551.கட்ட னேன்பிறந் தேனுனக் காளாய்க்

காதற் சங்கிலி காரண மாக

எட்டி னால்திக ழுந்திரு மூர்த்தீ

என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்

பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்

பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை

ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்

ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

2


நீ என் குற்றங்களை நோக்கி, இகழாது, உயிர்களிடத்து நீ விரும்புவ தாகிய குணம் என்னிடத்து இருத்தலை நோக்கி என்னை ஏற்றருளுதல் வேண்டும். அக் குணமாவது; யான் எப் பிழைசெய்வேனாயினும், உன் திருவடிக்குப் பிழையைச் செய்யேன்; வழுக்கிவிழும் பொழுதும் உன் திருப்பெயரைச் சொல்லுதலன்றி, வேறொன்றை அறியேன்.

கு-ரை: திருவடியை இடையீடின்றி அடைதலாவது, உயிர் கருவி கரணங்களோடு கூடாது தூய்தாய் நின்று அடைதல். 'திருக் கயிலையிலிருந்து அந்நிலையை அடையற்பாலனாகிய யான் இந்நிலையையடைந்தேன்' என்று இரங்கியவாறு. 'இந்நிலைதான் என்னால் வந்ததே' என்பார். "அதுவும் நான்படற் பாலதொன்றானால்" என்றார். 'படப்பாலதொன்றானால்' என்னும் பாடம் சிறவாமையறிக. "பிழுக்கை வாரியும் பால்கொள்வர்" என்பது ஒட்டணியாய் நின்றமையின், அதன் பொருள் வருவித்துருரைக்கப்பட்டது. திருவடிக்குப் பிழையேன்' என உருபு விரிக்க. எல்லாம் செய்வது திருவடியே யாகலின், அதனை மறந்து, 'யான் செய்தேன்' என்று எண்ணுவதே திருவடிக்குச் செய்யும் பிழையாதல் உணர்க. 'இப்பிழையைச் செய்யாது, திருவடியை எஞ்ஞான்றும் மறவாது நினையும் இவ்வொன்றன்முன்னே, ஏனைய குற்றங்கள் பலவும், பாலின்முன் சாணம் போலப் பொருளல்லவாய் ஒழியுமல்லவோ' என்றபடி. இதனானே, திருவடிப் பிழைத்தலாகிய குற்றத்தின்முன்னே, ஏனைய குணங்கள் பலவும் சிறிதும் பொருளல்லவாய் ஒழியும் என்பதும் பெறப்பட்டது. கண் வேண்டுதலே, கருத்தாகலின், "மருந்து" என்றதற்கு, 'மருந்தேனும்' என்றுரைத்தலே திருவுள்ளமாதல் அறிக.

2. பொ-ரை: 'எட்டு' என்னும் எண்ணின் வகையினால் விளங்குகின்ற சிறந்த வடிவங்களையுடையவனே, 'ஒற்றியூர்' என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, துன்பத்தைத் தரும் வினையையுடையேனாகிய யான, அவ்வினை