| | 558. | மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய் |  |  | மைந்த னேமணி யேமண வாளா |  |  | அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால் |  |  | அழையல் போகுரு டாஎனத் தரியேன் |  |  | முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன் |  |  | முக்க ணாமுறை யோமறை யோதீ |  |  | உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும் |  |  | ஒற்றி யூரெனும் ஊருறை வானே. |  |  | 9 | 
| 559. | ஓதம் வந்துல வுங்கரை தன்மேல் |  |  | ஒற்றி யூருறை செல்வனை நாளும் |  |  | ஞாலந் தான்பர வப்படு கின்ற |  |  | நான்ம றைஅங்க மோதிய நாவன | 
 
 9. பொ-ரை:  வேதத்தை ஓதுபவனே, மணி முதலியவற்றைக் கரையிடத்துக் கொணர்ந்து சேர்க்கும் தண்ணிய கடல் அலைகள் வந்து உலவுகின்ற 'ஒற்றியூர்' என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, எனக்கு வலிமையாய் உள்ளவனே, மணி போல்பவனே, அழகுடையவனே, நீ எனக்கு, 'மகம்' என்னும் நாண் மீன்கீழ் வந்த, 'சனி' என்னும் கோள்போல்பவனாயினை; அகத்தில் உள்ள பெண்டுகள், நான், ஆவது ஒரு காரியம் சொன்னால், 'கண்ணிலியே நீ என் அறிவாய்; கூவாதே; போ' என்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; முகத்தில் கண்ணில்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்? மூன்று கண்களையுடையவனே, இது முறையோ! கு-ரை:  சுவாமிகள் தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறுவாரல்லாராயினும், அஃது உலகியலாதலின், அவரிடமும் இஃது உண்டாயின் வியப்பில்லையென்றவாறு, சனி மகத்தில் வந்தால், நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்றல், கணிநூல் துணிபு. துன்பம் மிக்கதாயினும் இறைவனை இத்துணை வைது கூறுதல் கூடாதெனினும், அவன் தன் அடியவரிடத்து இன்னோரன்னவற்றையும் பொறுக்கும் பேரருளாளன் என்பதை விளக்க, இவ்வாறு இத்திருமொழி எழுந்தது என்க. 'அழையேல்' என்பதும் பாடம். 10. பொ-ரை: கடல் அலைகள் வந்து உலவுகின்ற கரையின்மேல் உள்ள திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனை, என்றும் |