பக்கம் எண் :

879
 

சீலந் தான்பெரி தும்மிக வல்ல

சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த

பாடல் பத்திவை வல்லவர் தாம் போய்ப்

பரக திதிண்ணம் நண்ணுவர் தாமே.

10

திருச்சிற்றம்பலம்


உலகத்தாரால்போற்றப்படுகின்ற நான்கு வேதம், வேதத்தின் ஆறு அங்கங்கள் இவற்றை ஓதிய நாவையுடையவனும், ஒழுக்கத்தில் மிகவல்ல இளமையை யுடையவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பி யாரூரன் பாடிய இப் பத்துப்பாடல்களாகிய இவைகளை வல்லவர்கள், மேலான கதியைப் போய் அடைவார்கள்; இது திண்ணம்.

கு-ரை: "பெரிதும் மிக" ஒருபொருட் பன்மொழி. சிறுமை இங்கு இளமையைக் குறித்தது.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்


அழுக்கு மெய்கொடென் றெடுத்தசொற் பதிகம்

ஆதிநீள்புரி அண்ணலை ஓதி

வழுத்தும் நெஞ்சொடு தாழ்ந்துநின் றுரைப்பார்

மாதொர் பாகனார் மலர்ப்பதம் முன்னி

இழுக்கு நீக்கிட வேண்டுமென் றிரந்தே

எய்து வெந்துயர்க் கையற வினுக்கும்

பழிக்கும் வெள்கிநல் லிசைகொடு பரவிப்

பணிந்து சாலவும் பலபல நினைவார்.

- தி. 12 சேக்கிழார்.