67. திருவலிவலம் பதிக வரலாறு: சுந்தரர், திருநாட்டியத்தான்குடி இறைவரைத் தொழுது பின்பு திருவலிவலம் சென்று வணங்கிப் பாடியருளியது இத் திருப்பதிகம் (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 44) இதில், 'சம்பந்தர், நாவுக்கரசர் பாடல்களை உகந்த பெருமானே' என்று சிறப்பித்திருத்தல் குறிப்பிடத்தக்கது. குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரைத் திருவலிவலத்தில் சென்று வணங்கியஞான்று உளதாய இன்ப மேலீட்டில், அப் பேற்றினது அருமையை நினைந்து அருளிச்செய்தது. பண்: தக்கேசி பதிக எண்: 67 திருச்சிற்றம்பலம் 677. | ஊனங் கத்துயிர்ப் பாய்உல கெல்லாம் | | ஓங்கா ரத்துரு வாகிநின் றானை | | வானங் கைத்தவர்க் கும்அளப் பரிய | | வள்ள லைஅடி யார்கள்தம் உள்ளத் | | தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந் | | தேச னைத்திளைத் தற்கினி யானை | | மானங் கைத்தலத் தேந்தவல் லானை | | வலிவ லந்தனில் வந்துகண் டேனே. | | 1 |
1. பொ-ரை: புலால் வடிவாகிய உடம்பில் இருந்து உயிர்ப்பனவாகிய உயிர்களாய் நின்று அவைகட்கு உணர்வை உண்டாக்கி நிற்பவனும், விண்ணுலக இன்பத்தையும் வெறுத்துத் தவம் செய்வார்கட்கும் அளத்தற்கரிய வள்ளலாய் உள்ளவனும், தன் அடியவர்களது உள்ளத்தினுள்ளே, தேனும் கைப்ப, அமுதம் ஊற்றெழுவதுபோல எழுகின்ற ஒளிவடிவினனும், அழுந்துந்தோறும் இனிமை பயக்கின்றவனும், மானை அகங்கையிடத்து ஏந்த வல்லவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்தமையாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனம் காண்பேன்! கு-ரை: 'உயிர்ப்பு' என்பது அதனையுடைய உயிர்களைக்
|