| | 676. | ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ |  |  | உன்னை உன்னிய மூவர்நின் சரணம் |  |  | புக்கு மற்றவர் பொன்னுல காளப் |  |  | புகழி னால்அருள் ஈந்தமை யறிந்து |  |  | மிக்க நின்கழ லேதொழு தரற்றி |  |  | வேதி யாஆதி மூர்த்திநின் அரையில் |  |  | அக்க ணிந்தஎம் மானுனை யடைந்தேன் |  |  | ஆவ டுதுறை ஆதிஎம் மானே. |  |  | 5 | 
********6, 7, 8, 9, 10
 திருச்சிற்றம்பலம் 
 5. பொ-ரை:  வேதம் ஓதுபவனே, உலகிற்கு முதலாய மூர்த்தியே, உன் அரையில் எலும்பை அணிந்த பெருமானே, திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, நீ, மூன்று ஊர்களில் ஓங்கி எரிகின்ற நெருப்பை ஒருசேர எழுப்பியபொழுது, அங்கு உன்னையே நினைத்திருந்த மூவராகிய அவர் மட்டில் உய்ந்து, உன் திருவடியை அடைந்து, மேல் உலகத்தை ஆளும் வண்ணம், அவர்கட்கு, புகழத்தக்க வகையில் திருவருள் ஈந்தமையை அறிந்து, அடியேன், மேலான உனது திருவடியையே தொழுது முறையிட்டு, உன்னை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். கு-ரை:  'முப்புரத்திலும் ஒக்க எரி தூவ' என்க. எரியை உண்டாக்கினமையை, தூவியவாறாக அருளினார். திரிபுரம் எரித்த காலத்தில், சிவபத்தியிற் பிறழாதிருந்த மூவரைச் சிவபிரான் உய்யக் கொண்டமையை மேலே உரைத்தாம் (தி. 7 பா. 55 பா. 8); கண்டு கொள்க. இது, முப்புரம் எரித்தஞான்று மூவர்க்குச் செய்த திருவருளை எடுத்தோதியருளியது.இத் திருப்பதிகத்துள்ளும், ஏனைய திருப்பாடல்களை நாம் பெறேமாயினேம்.
 6, 7, 8, 9, 10.*****
 |