பக்கம் எண் :

998
 
கூடுமோ றெங்ஙன மோஎன்று கூறக்

குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு

வாடிநீ வாளா வருந்தல்என் பானை

வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

6

683. பந்தித்தவ் வல்வினைப் பற்றறப் பிறவிப்

படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்

சந்தித் ததிற லாற்பணி பூட்டித்

தவத்தை ஈட்டிய தன்னடி யார்க்குச்



அறிந்திலேன்; மனத்தில் உள்ள குற்றங்களை ஆராயும் நெறியால் ஆராய்ந்து கண்டு அதனைத் திருத்தும் வகையை அறிந்திலேன்; அதனால், அதனை நன்னெறியிற் செல்லுமாறு செலுத்தும் வழிய அறிந்திலேன்; இவற்றால் 'இவன் நன்னிலையைப் பெறுதல் எவ்வாறோ!' என்று நல்லோர்கள் இரங்கிக்கூற இருக்கின்ற காலத்து, என்னையே சிறப்பாக யாவர்க்கும் காட்டி, 'இவன் எனக்கு அடிமை' என்று சொல்லி வெளிக்கொணர்ந்து, தனக்கு ஆளாகக் கொண்டு, 'இனி, நீ, பயனின்றி வாடி வருந்தலை' என்று தேற்றிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!

கு-ரை: 'பன்னல்' என்பதன் முதனிலையாகிய, 'பன்' என்பது, 'ஆராய்தல்' என்னும் பொருளது. அதுவே, பின்னர், ஆராய்ந்து பன்முறை சொல்லுதலைக் குறிக்கும். இனி, அம் முதனிலைதானே உகரம் ஏற்று உயிரீறாய் வேறுபட்டு நின்று ஆராய்ந்து நெறிப்படச் செய்தலைக் குறிப்பதாய், பஞ்சியை நூலாக்குதலையும், செய்யுள் செய்தலையும் குறிக்கும். ஆகவே, 'பனுவல்' என்னும் தொழிற்பெயர், ஆகுபெயராய், அதன் செயப்படுபொருளாகிய, பஞ்சி நூலையும், செய்யுளையும் குறிப்பதாயிற்று. அவ்வாற்றான், ஈண்டு, 'பனு' என்னும் முதனிலை பற்றி, "பனுவுமா பனுவி" என்று அருளினார் என்க. தேடுதல், செலுத்துதல், கூடுதல், இவற்றிற்குச் செயப்படு பொருள்களும், கூறுதலுக்கு வினை முதலும் வருவிக்கப்பட்டன. இத் திருப்பாடலின் முதல் இரண்டடிகளையும், ஏனையவற்றோடொப்ப வகையுளி செய்து சீரறுக்க. அன்றி, இயல்பாகவே வைத்து, 'அடிமயங்கிற்று' என்றலுமாம்.

7. பொ-ரை: பிணித்துள்ள வினைத் தொடர்பு அறுதலால்