பக்கம் எண் :

999
 
சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ்

சிவலோ கந்திறந் தேற்றவல் லானை

வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை

வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

7


684.எவ்வெவர் தேவர்இ ருடிகள் மன்னர்

எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த

அவ்வவர் வேண்டிய தேயருள் செய்து

அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை

இவ்விவ கருணைஎங் கற்பகக் கடலை

எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை

வவ்விஎன் ஆவிம னங்கலந் தானை

வவிவ லந்தனில் வந்துகண் டேனே.

8


பிறவியாகிய கடலினது பரப்புச் சுருங்குமாறு செய்பவனும், தன்னை உணர்ந்த உணர்வின் வலிமையால், தம் செயல்களைத் தன்னிடத்தே சேர்த்து, அதனால், செய்யும் செயலெல்லாம் தவமேயாகக் குவித்த தன் அடியவர்கட்குத் தனது திருவடிகள், நினைத்தற்கு எளியவாய்க் கிடைத்தலானே, தனது சிவலோகத்தின் வாயிலைத் திறந்து, அதன்கண் அவர்களைப் புகச்செய்ய வல்லவனும், தன்னையே வணங்குகின்றவர்களது மனத்தில் விளங்குபவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!

கு-ரை:பிறவி நீங்குமாறும், சிவலோகத்து ஏறுமாறும் இவை என்பது உணர்த்துதற் பொருட்டு, "பற்றற" எனவும், "எளிதாய்" எனவும் ஓதினாரேனும், 'பற்றறுத்து' எனவும், 'எளிதாகத் தந்து' எனவும் ஓதுதலே திருவுள்ளம் என்க. படுகடல் - ஒலிக்குங்கடல்; என்றது, அடையொடுவந்த உருவகம், 'தம்மடியார்க்கு என்பது பாடம் அன்று. "எளிது" என ஒருமையால் அருளியது, 'பாதம்' என்னும் பொதுமை நோக்கி. "எளிதாய்" என்ற எச்சம் காரணப்பொருட்டு. "ஏற்ற" என்றார், எல்லாவற்றிற்கும் மேல் உளதாதலின்.

8. பொ-ரை: தேவர்கள், இருடிகள், அரசர்கள் முதலாக எண்ணிறந்தவர்களாகிய எவரெவரும், எவ்விடத்திலும் இருந்து வழிபட, அவ்வெல்லா இடங்களிலும் நின்று அவர்களது வழி