பக்கம் எண் :

1000
 
685. திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத்

திறல்அ ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்

பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும்

பின்னையாய் முன்ன மேமுளைத் தானை


பாட்டினை ஏற்று, அவரவர் விரும்பியதை அவர்கட்கு அளித்து, இவ்வாற்றால், தன்னை அடைந்தவர்க்குப் புகலிடமாய் நிற்பவனும், இவ்வாறு உள்ள இவை இவையாகிய அருளைத் தருகின்ற எங்கள் கற்பகத் தருவும் கடலும் போல்பவனும், யான், 'எம் பெருமானே, எனக்கு அருள்செய்' என்று வேண்டிக்கொண்ட பின்பு, என் உயிரைத் தன்னுடையதாகக் கொண்டு, என் உள்ளத்திலே எஞ்ஞான்றும் நீங்காது இருப்பவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!

கு-ரை: 'எவ்வெவரும்' என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. "மற்று", அசை. 'அவ்' என்பது அடுக்கி, 'அவ் வவ' என வருதல் போல், 'இவ்' என்பது அடுக்கி, 'இவ்விவ' என, வந்தது. இவைகளில், ஈற்றில் நிற்கும் அகரம், சாரியை. 'இவை இவை' என்பது, அங்கங்கும் நின்று வழிபாட்டினை ஏற்று வேண்டுவோர் வேண்டுவதை அளித்தலும், பின்னும் புகலிடமாய் நிற்றலும் ஆகிய இவற்றை, 'இவ்விவர்' என்பது பாடம் அன்று. 'கருணைக் கற்பகம். கருணைக் கடல்' என்றவை, இல்பொருள் உவமைகள். 'கற்பகம், கடல்', என்றவை, உவமையாகு பெயர்கள் "கற்பகக் கடல்" உம்மைத் தொகை. உம்மைத் தொகைக்கண் நிலைமொழி மகரஈறு கெட, வருமொழி வல்லெழுத்து மிகுதலை, இன்பத் துன்பம்' (தி. 8 திருக்கோவையார் - 71.) என்றதனானும் அறிக. சுந்தரர், 'எம்பெருமானே அருளாய்' என்று வேண்டியது, திருக்கயிலையில்,

"மையல் மானுட மாய்மயங் கும்வழி
ஐய னேதடுத் தாண்டருள் செய்"

(தி. 12 பெ. புரா. திருமலை - 28.)

என்றது. "என்ற பின்னை" என்றது, 'என்று வேண்டியதனாலே' எனக் காரண காரிய நிலைகள் தோன்ற நின்றது.

9. பொ-ரை: வானத்தில் திரிகின்ற முப்புரங்களை அழித்ததும், குற்றம் செய்த, வலிமையுடைய அரக்கனாகிய இராவணனை