பக்கம் எண் :

1001
 
அரிய நான்மறை அந்தணர் ஓவா

தடிப ணிந்தறி தற்கரி யானை

வரையின் பாவைம ணாளன்எம் மானை

வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

9



ஒறுத்ததும், ஏனை, பெரிய ஆலகால விடத்தை அமுதமாக உண்டதும் முடிதற்குக் காரணனான பின்னோனாய், எப்பொருட்கும் முன்னே தோன்றினவனும், அரிய நான்கு வேதங்களை ஓதுகின்ற அந்தணர்கள், மனம் மாறுபடாது நின்று அடிபணிந்தும், அவர்களால் அறிதற்கு அரியவனும், மலைமகட்குக் கணவனும் ஆகிய எம் பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!

கு-ரை: தேவர்களாலும் தடுத்தற்கு அரியதாய் எங்கும் பரவினமையின், "பெரிய நஞ்சு" என்று அருளினார். "அமுது" என்றதன்பின், 'ஆக' என்பது வருவிக்க. 'நஞ்சினை அமுதமாக உண்டான்' என்றது, 'தேவர்கள் அமுதத்தைப் பகிர்ந்து உண்டதில் தனக்கு உரிய அமுதாகப் பெற்று உண்டது நஞ்சினையே' என்றபடி. முற்றுதல் - முடிதல். "முற்றும்" என்ற பெயரெச்சம், "பின்னை" என்ற காரணப் பெயரைக் கொண்டது. "பின்னை" என்றது, காலவாகுபெயர். உலகம் தோன்றி நெடுங் காலம் சென்ற பின்னரே, திரிபுரம் எரித்தமை முதலியன நிகழ்ந்தன என்றலே பொருந்துவதாதல் அறிக. யாவும் தோன்றுதற்கு முன்னே இருத்தலை, முளைத்தலாக அருளினார், பான்மை வழக்கால். வேதங்களில் அரிய பொருள்கள் உளவாயினும், அவற்றைச் சிவாகம வழியால் அன்றி உணரலாகாமையின், வேதம் ஒன்றையே உணரும் அந்தணர்களால், சிவபெருமான் அறிதற்கு அரியனாயினான் என்க. எனவே, இங்கு, "நான்மறை அந்தணர்" என்றது, சிவாகமங்களை, 'வேத பாகியம்' என்றும், அதன்கண் சொல்லப்பட்ட தீக்கை முதலியவற்றை, 'அந்தணர்களுக்கு உரிய அல்ல' என்றும் இகழ்ந்து, சிவபிரானையும் ஏனைத் தேவர்களோடு ஒப்பக் கருதுதலும், ஒரோவழி, மாயோன் முதலியோரைச் சிவபெருமானினும்உயர்ந்தோராகக் கருதுதலும் உடைய வேதியர்களையேயாயிற்று. மீமாஞ்சகர் கடவுளை அடிபணிதல் இன்மையின், இத்திருமொழி, மீமாஞ்சகரைக் குறித்தது என்றல் கூடாமை அறிக. வேதத்துள், ஈசானாதி பஞ்சப் பிரம மந்திரங்களும், உருத்திரனுக்கு ஆவுதி பண்ணும் மந்திரம் ஏனைய தேவர்கட்கு உரிய (இந்த்ராய ஸ்வாஹா, வருணாய ஸ்வாஹா) மந்திரங்கள் போலப் பெயரளவில் நில்லாது, முதற்கண் வணக்கம் சொல்லி, பின்னர்ப் பெயரைக்கூறி, அதன் பின், 'பசுபதி' எனச் சிறந்தெடுத்