686. | ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து | | நிறைக்க மால்உதி ரத்தினை ஏற்றுத் | | தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச் | | சுமந்த மாவிர தத்தகங் காளன் | | சான்று காட்டுதற் கரியவன் எளியவன் | | றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு | | மான்று சென்றணை யாதவன் றன்னை | | வலிவ லந்தனில் வந்துகண் டேனே. | | 10 |
தோதுவதும், (நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா) பிறவும் சிவபெருமானது தலைமையை உணர்த்தி நிற்பினும், அவற்றது சிறப்புச் சிவாகமங்களினன்றித் தெற்றென உணரவாராமையின், சிவாகமங்களைப் போற்றாதார், சிவபெருமானை யறிதல் அரிதாயிற்று என்க. சிவாகமங்கள் இன்றி, வேதம் ஒன்றாலேயும் சிவபிரானது தலைமையை அறிதல் கூடும் என்பார் உளராயின், அன்ன உணர்வுடையார், சிவாகமங்களை இகழார் என விடுக்க. சிவாகமத்தை இகழ்வார், சிவபெருமானது முதன்மையை உணராது தமது உணர்வையே சிறந்ததாகக் கூறி நிற்றல், இன்றும் எங்கும் கண்கூடாய் அறியப் படுவதேயாதல் அறிக. 10. பொ-ரை: தன்னொடு மாறுபடுதலை ஏற்ற பிரமனது தலைகளில் ஒன்றை அறுத்து, அதனை நிரப்ப, மாயோனது உதிரத்தை ஏற்றவனும், யாவருக்கும் காணப்படுகின்ற தோளின் மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தையுடையவனும், தன்னைக் காண்பதற்குரிய வழியைக் காட்டுதற்கு அரியவனும், தன்னிடத்திற் பொருந்திய மனத்தையுடையவர்கட்கு எளியவனும், அறியாமை வழிச் சென்று அணுக இயலாதவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்! கு-ரை: ஏன்று கொள்ளுதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மேலைத் திருப்பாடலில் சிவனை அறியமாட்டாத அந்தணரது தன்மையைக் குறித்தபின், இத் திருப்பாடலில், அவர்கட்குத் தந்தையாய் உள்ளவன் சிவபிரானை இகழ்ந்து அடைந்த நிலை இது என உணர்த்துகின்றார் என்பது, பிரமனை, 'அந்தணன்' என்ற குறிப்பால் விளங்குவதாகும். அவன் அடைந்த நிலையை அருளுகின்றவர், அவனுக்கு உண்மையை உணர்த்தாது, தானே முதல்வன் என்று சொல்லி அவன்பால் வெற்றிபெற நினைத்த அவனது தந்தை அடைந்த
|