பக்கம் எண் :

திருவாசகம்
106


குறடும் மூடனும், கொண்டது விடாது எனும்படியேயாகி - தாம் பிடித்ததை விடாது என்கிற முறைமையேயாகி, நல் - நல்ல, இடை அறா அன்பின் - இடையறாத கடவுள் பத்தியில், பசு மரத்து - பச்சை மரத்தில், ஆணி அறைந்தாற்போல - அடித்த ஆணி திண்மையாய்ப் பற்றி நிற்பதுபோல உறைத்து நின்று, கசிவு பெருகி - உருக்கம் மிகுந்து, கடல் என மறுகி - கடல் அலை போல அலைவுற்று, அகம் குழைந்து - மனம் வாடி, அனுகுலமாய் மெய் விதிர்த்து - அதற்கேற்ப உடல் அசைவுற்று, சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப - உலகவர் பேய் என்று தம்மை இகழ்ந்து சிரிக்க, நாண் ஒழிந்து - வெட்கமென்பது தவிர்த்து, நாடவர் பழித்து உரை - நாட்டிலுள்ளவர் கூறும் குறைச் சொற்களை, பூண் ஆக - அணியாக ஏற்று, கோணுதல் இன்றி - மனம் கோணுதல் இல்லாமல், சதுர் இழந்து - தமது திறமையொழிந்து, அறியாமல் கொண்டு சாரும் - சிவஞானம் என்னும் உணர்வினால் அடையப் பெறுகின்ற, கதி - வீடுபேற்றினையே, பரம அதிசயமாக - மேலான வியப்பாகக் கருதி, கன்று ஆ மனம் என - கன்றினையுடைய பசுவின் மனம் போல, கதறியும் பதறியும் - அலறியும் நடுங்கியும், மற்று ஓர் தெய்வம் - வேறொரு தெய்வத்தை, கனவிலும் நினையாது - கனவிலும் நினையாமல், அருபரத்து ஒருவன் - அரிய மேலான ஒருவன், அவனியில் வந்து - பூமியில் வந்து, குருபரன் ஆகி - குருமூர்த்தியாகி, அருளிய பெருமையை - அருள் செய்த பெருமையை, சிறுமை என்று இகழாதே - எளிமையாக எண்ணி அசட்டை செய்யாது, திருவடி இணையை - திருவடிகள் இரண்டையும், பிறிவினை அறியா நிழல் போல - உருவை விட்டு அகலாத நிழலைப் போல, முனியாது - வெறுக்காமல், முன்பின் ஆகி - முன்பின்னும் நீங்காது நின்று, அத்திசை - அந்தத் திசை நோக்கி நினைந்து, என்பு நைந்து உருகி - எலும்பு மெலிவுற்று உருக, நெக்கு நெக்கு ஏங்கி - மிகக் கனிவுற்று இரங்கி, அன்பு என்னும் ஆறு - பத்தியென்னும் நதியானது, கரை புரள - கரை புரண்டு ஓட, நன்புலன் ஒன்றி - நல்ல புலனறிவு ஒருமைப்பட்டு, நாத என்று அரற்றி - நாதனே என்று கூவி அழைத்து, உரை தடுமாறி - சொற்கள் குழறி, உரோமம் சிலிர்ப்ப - மயிர் சிலிர்க்க, கரமலர் மொட்டித்து - கைம்மலர் குவித்து, இருதயம் மலர - நெஞ்சத்தாமரை விரிய, கண் களிகூர - கண்கள் களிப்பு மிக, நுண்துளி அரும்ப - நுண்ணிய துளிகள் அரும்ப, சாயா அன்பினை - தளராத பேரன்பினை, நாள்தொறும் தழைப்பவர் - தினந்தோறும் வளர்ப்பவர் களுக்கு, தாயே ஆகி வளர்த்தனை - தாயாகியே அவர்களை வளர்த்தவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : உலகநெறி எளிமையுடையது. இறை நெறி கடுமையாதலின், சலிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படுதல்