கூடாதென்பார் "தப்பாமே தாம் பிடித்தது சலியா" என்றார். பிடித்தது - தெய்வம் என்பது ஒரு சித்தத்தை; அதனை, ஆறுகோடி மாயா சக்திகளின் செயலில் மயங்கி விட்டுவிடுதல் கூடாது என்றார். ஆடுதல் அலறுதல் பாடுதல் பரவுதல் என்பன உடல் வணக்கம். இதனைச் சரியா மார்க்கம் என்று சாத்திரம் கூறும். அதனால் உண்டாவது உள்ளம் உருகுதலும் உடல் கம்பித்தலும் ஆதலின், "ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்து" என்று அடுக்கிக் கூறினார். கொடிறு - குறடு, இடுக்கி. அகப்பட்ட பொருளை வெளியே விடாது குறடு. பேதையின் இயல்பும் அஃதே. இறை நெறியில் உறைத்து நிற்றற்கு உவமைகளாக இவ்விரண்டும் அமைந்தன. கசிவது பெருகுதலாலே அகங் குழைதலும், கடல் நீரென அலைப் புறுதலாலே மெய் விதிர்த்தலும் அமைய அடுக்கிக் கூறினார். பசுமரத்தாணி அறைந்தாற்போல உறுதிகொண்டு அகங்குழைந்து உள்ளமும் உடலும் சேர்ந்து தொழிற்படுவது கிரியை. "அறிமால் கொண்டு சார்தல்" யோகமாம். யோகம் மனத்தால் செய்வது. புறத்தே செய்வது சரியை; அகமும் புறமும் ஒத்துச் செய்வது கிரியை; அகத்தே மட்டும் செய்வது யோகம். இவற்றால் பெறுவது ஞானம். ஞான நிலையிற்சென்று இறைபணி நிற்பவர் உலகவர் பழியுரையைப் பூணாகக் கொள்வர் என்பார் "நாடவர், பழித்துரை பூணதுவாகக் கொண்டு" என்றார். கன்றை ஈன்றெடுத்த பசு அதனைக் காணாதபொழுது கதறுதல் இயல்பு; அதைப் போல, இறைபணி நிற்போர் கதற வேண்டும் என்பார், "கற்றா மனமெனக் கதறி" என்றார். எல்லாம் வல்ல முழுமுதற்பொருளே முத்தி கொடுக்க வல்லது. ஏனைய தெய்வங்கள் சிறு போகங்களையே கொடுக்கும். அவை உயிர் வர்க்கங்கள். ஆதலால், அவற்றை வணங்குதலால் பயனில்லையென்பார், "மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது" என்றார். பிடித்தது சலியாது மேற்கூறியவாறு செய்த வழிபாடுகளால், இறைவன் அவனியில் குருபரனாகி வந்து அருளுதலையும், அவ்வாறு அருளப் பெற்றவர்களது அனுபவ நிலையையும் அடுத்துக் கூறினார். ஐந்து பேரறிவும் இறைவனையே நாடுதல்தான் நன்புலன் ஒன்றுதலாம். இதனைச் சுந்தரரது அனுபவத்தில் வைத்துச் சேக்கிழார் பின்வருமாறு விளக்கினார்; "ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள" தன்னிடத்துப் பேரன்பு உடையராய், தாம் அற்று, தம் செயல் அற்று நிற்போரது செயல்களைத் தன்
|