பக்கம் எண் :

திருவாசகம்
272


அலியாகியும், பிறங்கு ஒளி சேர் - விளங்குகின்ற ஒளி பொருந்திய, விண் ஆகி - ஆகாயமாகியும், மண் ஆகி - பூமியாகியும், இத்தனையும் வேறாகி - இத்தனைக்கும் வேறுபட்டும், கண் ஆர் அமுதமுமாய் நின்றான் - கண்ணால் பருகப்படுகின்ற அமுதமுமாய் நின்றவனாகிய இறைவனது, கழல்பாடி - திருவடியைப் பாடி, இப்பூம்புனல் - இப்புது நீரில், பாய்ந்து ஆடு - வீழ்ந்து ஆடுவாயாக.

விளக்கம் : இறைவனது பேரொளியின் முன் பிற ஒளியுடைப் பொருள்களின் தன்மை விளங்காதாதலின், அது, சூரியனது ஒளிமுன் நட்சத்திரத்தின் ஒளி விளங்காததற்கு உவமையாயிற்று. ஞானத்தின் முன் அஞ்ஞானம் விலகுகிறது என்பது குறிப்பு.

இறைவன் எல்லாப் பொருள்களிலும் கலந்திருக்கிறான் என்பதைக் காட்ட, ‘பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி’ என்றும், எனினும் இவற்றால் தொடக்குறான் என்பதற்கு, ‘வேறாய்’ என்றும், ஆனால் நைந்துருகும் அடியார்க்கு இன்பம் தந்து கொண்டிருக்கிறான் என்பதை விளக்க, ‘கண்ணார் அமுதமுமாய் நின்றான்’ என்றும் கூறினர். இது, பொழுது புலர்ந்து பகல் வருதலைக் குறித்தபடியாம்.

இதனால், இறைவன் எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கும் தன்மை கூறப்பட்டது.

18

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : எங்கள் பெருமான் - எங்கள் தலைவனே, உன் கையில் பிள்ளை - உன் கையில் இருக்கின்ற குழந்தை, உனக்கே அடைக்கலம் என்று - உனக்கே அடைக்கலப்பொருளாகும் என்று வழங்கி வரும், அப்பழஞ்சொல் - அப்பழமொழியை, புதுக்கும் எம் அச்சத்தால் - புதப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒன்று உரைப்போம் - உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம், கேள் - கேட்டருள்வாயாக, எம் கொங்கை - எங்கள் தனங்கள், நின் அன்பர் அல்லார் தோள் - உன்னடியவர் அல்லாதார் தோள்களை, சேரற்க - தழுவாதிருக்க; எம் கை - எம் கைகள், உனக்கு அல்லாது - உனக்கன்றிப் பிற தேவர்க்கு, எப்பணியும் செய்யற்க -