விளக்கம் : இறைவன் எல்லாப் பொருளுமாய் இருக்கின்ற நிலையை வேதம், வேள்வி, மெய்ப்பொருள், பொய்ப்பொருள், ஒளி, இருள், துன்பம், இன்பம், பாதி, முற்றும், பந்தம், வீடு, ஆதி, அந்தம் ஆகியிருக்கின்றான் எனக் கூறி விளக்கினார். மெய்ப்பொருளாவது, நிலைபேறுடைய பொருளான கடவுள், பொய்ப்பொருளாவது, நிலையில்லாதது; மாயா காரியங்களாகிய உலகம். ஒளியாவது, அறிவு. இருளாவது, அறியாமை. பாதியாவது, கட்டு நீங்காத உயிர்கள் தம் முனைப்பினால் செய்யும் செயல். முற்றுமாவது, கட்டு நீங்கிய உயிர்கள் திருவருள்வழி நின்று செய்யும் செயல். பந்தமாவது, பிறப்பு நிலை. வீடாவது, பிறப்பு நீங்கிப் பேரின்பம் உற்ற நிலை. ஆதியாவது, உலகத் தோற்றம். அந்தமாவது, அதன் முடிவு. இதனால், இறைவனது பரிபூரண வியாபகம் கூறப்பட்டது. 20 திருச்சிற்றம்பலம்
|