பக்கம் எண் :

திருவாசகம்
36


இன்பப் பொருளாயும் அங்குத் தங்குகின்றான். அப்பொழுது அம்மனம் நீராய் உருகுகிறது. அவ்வாறு உருகிய உயிரை இறைவன் தன்மயமாகச் செய்கின்றான். இக்கருத்துகளை விளக்கவே, "நெஞ்சில் வஞ்சங்கெட ................. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே" என்றான்.

இறைவன் தனக்கென ஓர் இன்பமும் துன்பமும் இல்லான்; அடியார்க்கு வரும் இன்பதுன்பங்களைத் தான் ஏற்றுக்கொள்வதனால் இன்பமும் துன்பமும் உள்ளான். அதனால், "இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே," என்றார்.

இறைவன், எல்லாப் பொருளிலும் கலந்திருத்தலால் "யாவையுமாய்," தன்மையால் வேறாதலால் "அல்லனுமாய்" இருக்கிறான். ஒளியும் இருளும் அவனன்றி இன்மையால், "சோதியனே, துன்னிருளே" என்றார். உலகத்திற்கு ஆதியும் நடுவும் முடிவுமாய் நிற்கின்ற இறைவன், தனக்கு அவற்றை உடையனல்லன் ஆதலின், "ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே" என்றார்.

இறைவனது உருவத்தைக் கண்ணால் காண முடியாது, அறிவினாலும் அறிய முடியாது என்பார், "நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே" என்றார். அனுபவத்தினால் காணக்கூடியவன் இறைவன் என்பதை உணர்த்த, "சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே" என்றார்.

உயிர்களின் மனப்பக்குவத்திற்கேற்ப இறைவன் அருளுவதை விளக்க, "மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே" என்றார்.

இவற்றால் இறைவன் பண்புகள் விளக்கப்பட்டன.

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப

85. ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

90. தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்

95. பல்லோரும் ஏத்தப் பணிந்து.

பதப்பொருள் : வேற்று விகார - வெவ்வேறு விகாரங்களையுடைய, விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் - ஊனாலாகிய