பக்கம் எண் :

திருவாசகம்
389


பதப்பொருள் : ஞாலம் மிக - உலகம் உய்யும்படி, கோல வரைக் குடுமி - அழகிய கயிலை மலையின் உச்சியினின்றும், குவலயத்து - நிலவுலகில், வந்து - இறங்கி வந்து, சால அமுது உண்டு - வந்தி தரும் பிட்டினை நிரம்ப உண்டும், தாழ்கடலில் - மிக ஆழமான கடலில், மீது எழுந்து - வலைஞனாய்க் கட்டுமரத்தின்மீது ஏறியும், பரிமேற்கொண்டு - பரிமேலழகனாய்க் குதிரைமீது வந்தும், நமை ஆண்டான் - நம்மையாண்டருளினவனாகிய, சீலம் திகழும் - நல்லொழுக்கம் விளங்குகின்ற, திருவுத்தரகோச மங்கை - திருவுத்தரகோசமங்கையிலுள்ள, மாலுக்கு அரியானை - திருமாலுக்கும் காணுதற்கு அருமையான இறைவனை, நாம் வாயாரப் பாடி - நான் வாய் நிரம்பப் பாடி, பூலித்து - உடல் பூரித்து, அகம் குழைந்து - மனம் நெகிழ்ந்து, பொன்னூசல் ஆடாமோ - பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்.

விளக்கம் : கயிலையினின்றும் இறங்கி வந்து பிட்டமுது உண்டதும், அலைகடல்வாய் மீன் விசிறியதும், பரிமேல் அழகனாய் வந்ததும் இறைவன் திருவிளையாடல்களாம். அடியார்பொருட்டு எளிமையாக வந்தான் எனினும் மிகப்பெரியவன் என்பார், 'மாலுக் கரியானை' என்றார். உடல் பூரித்தலும், உள்ளங்குழைதலும் அவனைப் பாடுதலால் உண்டாம் பயனாம். 'பூரித்து' என்பது, எதுகை நோக்கிப் 'பூலித்து' எனத் திரிந்தது.

இதனால், இறைவன் திருவிளையாடல்களைப் பாட வேண்டும் என்பது கூறப்பட்டது.

8

தெங்குலவு சோலைத்திரு உத்தர கோசமங்கை
தங்குலவு சோலைத் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுங் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல ஆடாமோ.

பதப்பொருள் : பொங்கு உலவு - விளக்கம் பொருந்திய, பூண் முலையீர் - ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய பெண்களே, தெங்கு உலவு சோலை - தென்னை மரங்கள் பரவியுள்ள சோலையையுடைய, திருவுத்தரகோச மங்கை - திருவுத்தர கோச மங்கையில், தங்கு உலவு சோதி - தங்குதல் பொருந்திய ஒளி மயமான, தனி உருவம் வந்தருளி - ஒப்பற்ற திருவுருத்தை உடைய இறைவன் வந்தருளி, எங்கள் பிறப்பு அறுத்திட்டு - எங்கள் பிறவியைத் தொலைத்து, எம் தரமும் - எம் போல்வாரையும், ஆட்கொள்வான் - அடிமை கொள்ளும்பொருட்டு, பங்கு உலவு கோதையும் - ஒரு பாகத்தில் பொருந்திய மங்கையும், தானும் -