பக்கம் எண் :

திருவாசகம்
390


தானுமாய்த் தோன்றி, பணிகொண்ட - என் குற்றேவலைக் கொண்ட, கொங்கு உலவு - மணந்தங்கிய, கொன்றை - கொன்றை மாலையணிந்த, சடையான் - சடையையுடையவனது, குணம் பரவி - குணத்தைப் புகழ்ந்து, பொன்னூசல் ஆடாமோ - நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்.

விளக்கம் : இறைவனது உருவம் ஒப்பற்ற சோதிப் பிழம்பாதலின், 'சோதித் தனியுருவம்' என்றார். ஆனால், உத்தரகோசமங்கையில் அடிகளுக்கு அம்மையப்பனாகக் காட்சி கொடுத்தானாதலின், ' பங்குலவு கோதையும் தானும்' என்றார், 'உருவம்' என்றது, உருவத்தை உடையவனைக் குறித்தது.

இதனால் இறைவனது குணத்தைப் பாட வேண்டும் என்பது கூறப்பட்டது.

9

திருச்சிற்றம்பலம்