பக்கம் எண் :

திருவாசகம்
424


ஏசா நிற்பர் என்னைஉனக் கடியா னென்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்றானும் பேணா நிற்பேன் நின்னருளே
தேவா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே.

பதப்பொருள் : தேசா - ஒளியுருவானவனே, ஈசா - எல்லாம் உடையவனே, பொன்னம்பலத்து ஆடும் - பொற்சபையில் நடிக்கின்ற, எந்தாய் - எந்தையே, என்னை - அடியேனை, பிறரெல்லாம் - மற்றவர்கள் எல்லாம், ஏசாநிற்பர் - அன்பில்லாதவன் என்று இகழ்வார்கள், உனக்கு அடியான் என்று - உனக்கு அடியவன் என்று, பேசாநிற்பர் - பேசுவார்கள்; எனினும், யான் - அடியேன், நின் அருளே பேணா நிற்பேன் - உன்னருளையே விரும்பி நிற்கின்றேன்; ஆதலின், நேசர் சூழ்ந்திருக்கும் - அடியார் சூழ்ந்திருக்கின்ற, திருவோலக்கம் சேவிக்க - உன் திருச்சபையைக் காண்பதற்கு, இனித்தான் இரங்காய் - இனி இரங்கியருள்வாயாக.

விளக்கம் : உலகத்தார் தத்தம் மனத்தில் தோன்றியவாறே என்னைப்பற்றிப் பலவாறு பேசுகின்றனர் என்பார், 'ஏசாநிற்பர், பேசா நிற்பர்' என்றார். 'யான்தானும்' என்பதில் உள்ள, 'தான், உம்' என்பன அசைகள். திருவோலக்கம் - அடியார்க்கு அருள இறைவன் அம்மையோடு வீற்றிருக்கும் சபை.

இதனால், அடியார் கூட்டத்துள் சேர்வதற்கு இறைவன் திருவருளையே பேணி நிற்றல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

6

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென் றருளாயே.

பதப்பொருள் : எங்கள் வாழ்வே - எங்களது வாழ்வாயுள்ளவனே, அம்பலக் கூத்தன் - அம்பலத்தாடும் பெருமான், நமக்கு இரங்கும் - நமக்கு அருள் புரிவான், என்று என்று - என்று பலகால் நினைந்து, ஏமாந்திருப்பேனை - இன்புற்றிருக்கும் எளியேனை, அருங்கற்பனை - அருமையான உபதேசத்தை, கற்பித்து ஆண்டாய் - அருள் செய்து ஆட்கொண்டாய்; அவ்வாறிருக்க, ஆள்வார் இலிமாடு ஆவேனோ - நான் இப்போது ஆள்வாரில்லாத செல்வம் போலப் பயனற்று ஒழிவேனோ, நெருங்கும் - நெருங்கிய, அடியார்களும் நீயும் - பழவடியார்களும் நீயும், நின்று நிலாவி - நின்று விளங்கி, விளையாடும் - விளையாடுகின்ற, மருங்கே சார்ந்து வர - பக்கத்திலே நெருங்கி வரும்படி, வா என்று அருளாய் - என்னை வா என்று அழைத்து அருள் செய்வாயாக.

விளக்கம் : அருங்கற்பனையாவது, அறிதற்கு அரிய பொருள்கள். அவற்றை,