பக்கம் எண் :

திருவாசகம்
431


ஏனையோரது, உணர்வுக்கும் - உணர்ச்சிக்கும், தெரிவு அரும் பொருளே - உணர்வதற்கு அருமையான பொருளே, இணங்கு இலி - ஒப்பில்லாதவனே, எல்லா உயிர்கட்கும் உயிரே - எல்லா உயிர்களுக்கும் உயிரானவனே, எனை - என்னை, பிறப்பு அறுக்கும் - பிறவிப் பிணியைப் போக்கி உய்விக்கின்ற, எம் மருந்தே - எங்களது மருந்து போன்றவனே, திணிந்ததோர் இருளில் - செறிந்த இருளில், தெளிந்த தூவெளியே - தெளிவாய்க் காணப்பட்ட தூய ஒளியே, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே, குணங்கள்தாம் இல்லா - குணங்கள் இல்லாத, இன்பமே - ஆனந்தமே, உன்னைக் குறுகினேற்கு - உன்னையடைந்த எனக்கு, இனி என்ன குறை - இனி என்ன குறையுள்ளது?

விளக்கம் : இருள், அறியாமை. அறிவு, ஒளி. இருளில் உள்ள உயிர்களுக்கு இறைவன் அவ்விருளை நீக்குகின்ற ஒளியாய் வெளிப்படுகின்றான் என்பார், 'திணிந்ததோர் இருளில் தெளிந்த தூவெளியே' என்றார். மாயா குணத்தால் வரும் இன்பம் போலத் துன்பத்தோடு கூடியது அன்று இறைவன் இன்பம் ஆதலின், 'குணங்கள்தா மில்லா இன்பமே' என்றார். மாயா குணங்கள் மூன்று; அவை சத்துவம், இராசதம், தாமசம் என்பன. அவற்றுள் சத்துவத்தால் இன்பமும், இராசதத்தால் துன்பமும் உண்டாகுமாதலால், அவ்வின்பம் துன்பத்தொடு கூடி நிற்பதாகும். இறைவன் அம்முக்குணங்களும் இல்லாதவனாகலின், அவனது இன்பம் என்றும் இன்பமேயாம். இத்தகைய இன்பத்தை அடைந்த பின்னர், அடைய வேண்டுவது ஒன்றும் இல்லை என்பார், 'உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே' என்று தம் நிலையை எண்ணிப் பெருமிதங்கொள்கின்றார்.

இதனால், இறைவன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவன் என்பது கூறப்பட்டது.

4

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை என்னிரக் கேனே.

பதப்பொருள் : குறைவு இலா நிறைவே - யாதொரு குறைவுமில்லாத நிறைவையுடைய பொருளே, கோதிலா அமுதே - குற்றமற்ற அமுதே, ஈறு இலா - முடிவில்லாத, கொழுஞ்சுடர்க் குன்றே - செழிப்பான ஒளி மலையே, மறையுமாய் - வேதமாகியும்,