பக்கம் எண் :

திருவாசகம்
430


அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே
திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே.

பதப்பொருள் : அன்பர்க்கு அரைசனே - அடியார்களுக்கு இறைவனே, அடியனேனுடைய அப்பனே - அடியேனுடைய தந்தையே, ஆவியோடு ஆக்கை - உயிரோடு உடம்பும், புரைபுரை கனிய - அடுக்குத்தோறும் நெகிழ்ச்சியுண்டாகும்படி, புகுந்து நின்று உருக்கி - உள்ளத்தே புகுந்து நின்று உருகச்செய்து, பொய் இருள் கடிந்த - பொய்யாகிய அஞ்ஞானத்தைப் போக்கிய, மெய்ச்சுடரே - உண்மை ஞானமே, திரை பொரா - அலை மோதாது, மன்னும் - நிலையான, அமுதத் தெண்கடலே - அமுதமாகிய தெளிந்த கடலே, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, உரை உணர்வு - வாக்கும் மனமும், இறந்து நின்று - கடந்து நின்று, உணர்வதோர் உணர்வே - திருவருளால் உணரும்படியான உணர்ச்சிப்பொருளே, யான் - நான், உன்னை உரைக்குமாறு - உன்னைப் புகழ்ந்து உரைக்கின்ற வழியை, உணர்த்தே - உணர்த்துவாயாக.

விளக்கம் : 'புரைபுரை' என்றது, உடம்பின் கண்ணுள்ள எழுவகைத் தாதுக்களையும், ஒளியின் முன் இருள் விலகுவது போல அறிவின் முன் அறியாமை விலகுமாதலின், அவ்வறியாமையைப் பொய்யென்றும், அறிவை மெய்யென்றுங்கூறினார். பொய்யாவது, நிலையாமை. மெய்யாவது, நிலைத்தல். 'வாக்கு' என்பது பாசஞானமும், 'மனம்' என்பது பசுஞானமும் ஆகும். அவற்றைக் கடந்து நின்று அறிதலாவது, திருவருள்வழி நின்று அறிதலாம்.

இதனால், இறைவன் வாக்கு மனாதீதன் என்பது கூறப்பட்டது.

3

உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார்
உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
திருப்பெருந் துறையுறை சிவனே
குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக்
குறுகினேற் கினியென்ன குறையே.

பதப்பொருள் : உணர்ந்த - கற்று உணர்ந்த, மாமுனிவர் - பெரிய முனிவரும், உம்பரோடு - தேவருடன், ஒழிந்தார் -