பக்கம் எண் :

திருவாசகம்
434


விளக்கம் : இறைவனைத் தவிர மற்று எல்லாப் பொருளும் நீக்கத் தக்கனவேயாதலின், 'நீயலால் பிறிது மற்றின்மை' என்றார். எல்லாப் பொருள்களையும் சிறிது சிறிதாக விடுத்துச் சென்ற உயிர், முடிவில் இறைவனை அடையுமாதலின், 'சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றாம் சிவனே' என்றார். உலகில் உள்ள பொருள்களில் ஒரு பொருளும் அவன் அல்லனாகலின், 'ஒன்றும் நீயல்லை' என்றார். ஆனாலும், ஒரு பொருளும் அவன் இயக்கமின்றித் தொழிற்படாது ஆதலின், 'அன்றி ஒன்றில்லை' என்றார்.

இதனால், இறைவன் எல்லாப் பொருள்களையும் விட்டவர்களாலேயே அடையத் தக்கவன் என்பது கூறப்பட்டது.

7

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் காரய லுள்ளார்
ஆனந்தம் ஆக்குமென் சோதீ.

பதப்பொருள் : பார் - பூமியும், பதம் - மேலே உள்ள பதங்களும், அண்டம் அனைத்துமாய் - இவற்றையுள்ளடக்கிய பல்வேறு அண்டமும் ஆகிய எல்லாப் பொருளுமாய், முளைத்து - தோன்றி, பரந்தது ஓர் - விரிந்ததாகிய ஒரு, படர் ஒளிப்பரப்பே - படருகின்ற ஒளிப்பிழம்பே, நீர் உறு தீயே - நீரில் கலந்துள்ள நெருப்புப் போன்றவனே, நினைவதேல் அரிய - நினைப்பிற்கு அருமையான, நின்மலா - தூய பொருளே, நின் - உனது, அருள் வெள்ளம் - திருவருளாகிய வெள்ளம் பாய்கின்ற, சீர் உறு - சிறப்புப் பொருந்திய, சிந்தை - (அடியாரது) சித்தத்தில், எழுந்தது - உண்டாகியதாகிய, ஓர் தேனே - ஒப்பற்ற தேன் போன்றவனே, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபொருமானே, ஆனந்தம் ஆக்கும் - எனக்கு இன்பத்தை உண்டாக்குகின்ற, என் சோதீ - என்னொளியுடைப் பொருளே, இங்கு - இவ்விடத்தில், உறவு யார் - உறவாயிருப்பவர் யார்? அயல் உள்ளார் ஆர் - அயலாய் இருப்பவர் யார்?

விளக்கம் : சங்கார காலத்தில் இறைவனிடத்தில் ஒடுங்கியிருந்த பொருள்கள் படைப்புக் காலத்தில் மீளவும் தோன்ற, அவற்றில் அவன் நிறைந்து நின்றான் என்றார், 'பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் ஒளியே' என்றார். நீரில் சூடு எங்கும் நிறைந்திருத்தல் போல, தோற்றிய பொருளில்