மரத்தின் கணுப் போன்றது, மரக்கண் - என் கண் மரத்தினால் ஆனது, என செவி இரும்பினும் வலிது - என்னுடைய காது இரும்பைக்காட்டிலும் வன்மையுடையது, (அவ்வாறிருக்க) அயனும்மாலும் - பிரமனும் திருமாலும், அன்பராகி - உன்னிடத்து அன்புடையவராகி, அருந்தவம் முயல்வார் - செய்தற்கரிய தவத்தைச் செய்கின்றனர், அழல் உறும் மெழுகு ஆம் - நெருப்பைச் சேர்ந்த மெழுகு போல உள்ளம் உருகுகின்றவராய், என்பராய் - எலும்பு வடிவினராய், நினைவார் - உன்னை நினைப்பவர்கள், மற்று எனைப் பலர் - இன்னும் எத்தனையோ பேர் உளர், நிற்க - அவரெல்லாம் இருக்க, இங்கு - இவ்விடத்து, எனை - அடியேனை, எற்றினுக்கு ஆண்டாய் - நீ எதற்காக ஆட்கொண்டருளினாய்? விளக்கம் : பராய் என்பது ஒரு வகை மரம்; கணுக்கள் நிறைந்தது. கணு வலிமையுடையதாய் இருக்கும். பராய் மரத்தினது கணுவைப் போன்று மனம் வலிமையுடையதாயுள்ளது என்பார், 'வன்பராய் முருடொக்கும் என் சிந்தை' என்றார். கண்ணை மரம் என்றது, கண்ணீர் பெருக்காமை பற்றியும், செவியை இரும்பு என்றது, உபதேசத்தைக் கேட்டும் பயன் அடையாமை பற்றியுமாம். அகவுறுப்பு மனம்; கண்ணும் செவியும் பிறவுறுப்புகள். இவ்விரண்டும் ஒத்துத் துணை புரிந்தால்தான் இறை வழிபாடு செய்ய முடியும் என்பதாம். இதனால், இறைவன் திருவருளைப் பெறுதற்கு உருக்கம் இன்றியமையாதது என்பது கூறப்பட்டது. 4 ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால் ஐய னேயென்றுன் அருள்வழி யிருப்பேன் நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே நாத னேயுனைப் பிரிவுறா அருளைக் காட்டித் தேவநின் கழலிணைக் காட்டி காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய் சேட்டைத் தேவர்தந் தேவர்பி ரானே திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. பதப்பொருள் : ஐயனே - தலைவனே, நாட்டுத் தேவரும் - உலகத்தார் சொல்லுகின்ற பற்பல தேவர்களும், நாடு அரும்பொருளே - நாடி அடைவதற்கு அருமையான பொருளே, நாதனே - இறைவனே, தேவ - தேவனே, சேட்டைத்தேவர்தம் - கூட்டமான பல தேவர்களுக்கு, தேவர் பிரானே - தலைவரான பெருந்தேவர்களுக்கும் தலைவனே, திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபிரானே, ஆட்டுத் தேவர் - உலகத்தை ஆட்டுகின்ற தேவரது, விதி ஒழித்து -
|