நிலைய னேஅலை நீர்விட முண்ட நித்த னேஅடை யார்புர மெரித்த சிலைய னேயெனைச் செத்திடப் பணியாய் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. பதப்பொருள் : விடைப்பாகா - இடபவாகனனே, சங்கரா - சங்கரனே, எண் இல் வானவர்க்கு எல்லாம் - எண்ணிறந்த தேவர்கட்கெல்லாம், நிலையனே - ஆதாரமானவனே, அலை நீர் விடம் உண்ட - அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை அருந்திய, நித்தனே - அழியாதவனே, அடையார் புரம் எரித்த - பகைவரது திரிபுரத்தை நீறாக்கின, சிலையனே - வில்லையுடையவனே, திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே, புலையனேனையும் - புல்லறிவாளனாகிய என்னையும், பொருள் என நினைந்து - ஒரு பொருளாக எண்ணி, உன் அருள் புரிந்தனை - உன்னுடைய திருவருளை அளித்தனை, புரிதலும் - அவ்வாறு கருணை காட்டலும், களித்து - மகிழ்ந்து, தலையினால் நடந்தேன் - தலையால் நடப்பது போலச் செருக்குற்றேன், எனை - அடியேனை, செத்திடப் பணியாய் - உடம்பினின்றும் நீங்கும்படி அருளுவாய். விளக்கம் : அருள் பெற்ற பின் இறைபணியில் நிற்க வேண்டிய யான் அதனை மறந்து திரிகின்றேன் என்பார், 'களித்துத் தலையினால் நடந்தேன்' என்றார். இந்நிலை நீங்கி உன் திருவடியை அடையும்படி அருள் செய்ய வேண்டும் என்பார், 'எனைச் செத்திடப் பணியாய்' என்றார். இதனால், இறைவனது திருவருளைப் பெற்ற பின்பும் செருக்கும் கொள்ளுதல் கூடாது என்பது கூறப்பட்டது. 3 அன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார் அயனும் மாலும்மற் றழலுறு மெழுகாம் என்ப ராய்நினை வார்எ னைப்பலர் நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய் வன்ப ராய்முரு டொக்கும்என் சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிது தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. பதப்பொருள் : தென்பராய்த் துறையாய் - அழகிய திருப்பராய்த்துறை என்னும் பதியையுடையவனே, சிவலோகா - சிவலோகனே, திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, என் சிந்தை - எனது மனமானது, வன்பராய் முருடு ஒக்கும் - வலிய பராய்
|