பக்கம் எண் :

திருவாசகம்
47


குறிப்பிடப்பட்டது. திருப்பெருந்துறைக்கு மேற்கே மதுரை இருத்தலால் ‘குடநாடு’ என்றார்.

வேலம் புத்தூர் விட்டே றருளிக்

30. கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்

பதப்பொருள் : வேலம்புத்தூர் - வேலம்புத்தூர் என்னும் திருப்பதியில், விட்டேறு அருளி - வேற்படையைக் கொடுத்தருளி, கோலம் - தன் திருக்கோலத்தை, பொலிவு - சிறப்பாக, காட்டிய கொள்கையும் - காணுமாறு செய்த கோட்பாடும்

விளக்கம் : வேற்படை நல்கியது உக்கிரகுமார பாண்டியனுக்கு என்க.

தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற் கீந்த விளைவும்

பதப்பொருள் : சாந்தம்புத்தூர் - சாந்தம்புத்தூரில், வில்பொருவேடற்கு - வில்லினால் போர் செய்கின்ற ஒரு வேடனுக்க, தர்ப்பணம் அதனில் - கண்ணாடியில், ஈத்த - வாட்படை முதலியவற்றைக் கொடுத்த, விளைவும் - பயனும்

விளக்கம் : இவ்வரலாறும் அறியப்படவில்லை.

மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்

பதப்பொருள் : அருளிய - ஓர் அன்பர்க்கு அருளுதற் பொருட்டு, மொக்கணி - குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் தோற்பையில், முழுத்தழல் மேனி - மிக்க நெருப்புத் தோன்ற தனது உருவத்தை, சொக்கதாகக் காட்டிய தொன்மையும் - அழகாகக் காட்டிய பழமையும்.

விளக்கம் : மொக்கணியை இலிங்கமாகக் காட்டியது : இறைவழி பாட்டின் பின்னரே உணவருந்தும் கொள்கையுடைய ஒரு வணிக அன்பரைப் பரிகசித்தற்பொருட்டு அவர்தம் மைத்துனர் கொள்ளுப்பையில் மணலை நிரப்பிச் சிவலிங்கத்தைப் போலச் செய்து வழிபடச் செய்தார்; பின்பு உண்மையுரைத்து நகைத்துக் கொள்ளுப்பையை அசைத்தார். அப்போது அது உண்மையாகவே சிவலிங்கம் ஆகிவிட்டது. அது முதல் பெருமானும் மொக்கணீசர் எனப் பெயர் பெற்றான் (கொங்குமண்டலச் சதகம்).

35. அரியொடு பிரமற் களவறி யொண்ணான்
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்

பதப்பொருள் : அரியொடு பிரமற்கு - திருமாலுக்கும் பிரமனுக்கும், அளவு அறி ஒண்ணான் - அளவு அறியப்படாத