பக்கம் எண் :

திருவாசகம்
490


சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பதப்பொருள் : முத்தனே - இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவனே, முதல்வா - முதல்வனே, முக்கணா - மூன்று கண்களையுடையவனே, முனிவா - முனிவனே, மொட்டு அறா மலர் - அரும்புத் தன்மை நீங்காத மலர்களை, பறித்து இறைஞ்சி - பறித்து அருச்சித்து, பத்தியாய் நினைந்து - அன்போடு நினைத்து, பரவுவார்தமக்கு - வழிபடுவோர்க்கு, பரகதி கொடுத்து அருள் செய்யும் - வீடு பேறு கொடுத்தருள்கின்ற, சித்தனே - ஞானமயனே, செல்வத் திருப்பெருந்துறையில் - செல்வம் நிறைந்த திருப்பெருந்துறையின்கண், செழுமலர் - செழுமையான மலர்களையுடைய, குருந்தம் மேவிய - குருந்த மர நிழலைப் பொருந்திய, சீர் அத்தனே - சிறப்புடைய தந்தையே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேனாகிய யான் அன்போடு அழைத்தால், அதெந்துவே என்று அருளாய் - அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!

விளக்கம் : முக்கண்களாவன, சூரியன் சந்திரன் அக்கினி என்பன. மொட்டறா மலராவது, வண்டு மொய்க்காத தூய்மையையுடைய மலராம். பத்தியாய் வழிபடுவார்க்குப் பரகதி கொடுப்பவனாதலின், அன்போடு வழிபடும் தமக்கும் அருள வேண்டும் என்பதாம்.

இதனால், இறைவனை முக்கரணங்களினாலும் வழிபட வேண்டும் என்பது கூறப்பட்டது.

8

மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவங்
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளும்நான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பதப்பொருள் : மருளனேன் மனத்தை - மயங்குந்தன்மையுடையேனது மனத்தை, மயக்கு அற நோக்கி - அதன் மயக்கம் தீர்ந்திருக்கக் கண்ணால் பார்த்து, மறுமையோடு இம்மையும் கெடுத்த - மறு பிறவியோடு இப்பிறவி யையும் ஒழித்த, பொருளனே - மெய்ப்பொருளானவனே, புனிதா - தூய்மை யானவனே, பொங்கு - சீறுகின்ற, வாள் அரவம் - கொடிய பாம்பும், கங்கை நீர் -