என்று வருந்துவார், 'பேரானந்தம் பேராமை வைக்க வேண்டும்' என்று வேண்டுகிறார். பேரின்பம் இடைவிடாது பெற்றிருக்க அருள வேண்டும் என்று வேண்டியபடி. இதனால், இறைவன் சிவபுரத்தரசன் என்பது கூறப்பட்டது. 9 மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனம்நெகா நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே ஊனே புகுந்த உனையுணர்ந்தே உருகிப் பெருகும் உளளத்தைக் கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடுவதே? பதப்பொருள் : மான் ஒர் பங்கா - மானைப் போன்ற பார்வையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே, வந்திருப்பார் மதுரக்கனியே - வணங்குவோர்க்கு இனிய கனி போன்று இன்பம் அளிப்பவனே, கோனே - இறைவனே, நம்பி - நம்பியே, மனம் நெகா - மனம் நெகிழாமல், நான் ஒர் தோளாச் சுரை ஒத்தால் - நான் துளைக்கப்படாத ஒரு சுரைக்காயைப் போன்று இருந்தால், இத்தால் வாழ்ந்தாயே - இதனால் நீ வாழ்ந்துவிட்டாயோ? ஊனே புகுந்த - உடம்பிலே முன்னரே புகுந்த, உனை உணர்ந்தே - உன்னையறிந்து, உருகிப்பெருகும் உள்ளத்தை - இளகிப் பூரிக்கும் மனத்தை, அருளும் காலம் - நீ அருள் புரியும் காலமானது, கொடியேற்கு - கொடுமையையுடைய எனக்கு, கூடுவது என்றோ - கூடுவது எப்பொழுதோ? விளக்கம் : 'துளையிடப்பட்ட சுரைக்காய் வீணைப்பத்தராகவும், குடுக்கையாகவும் பயன்படும்; துளையிடப்படாத சுரைக்காய் ஒன்றுக்கும் பயன்படாது. அதைப் போன்று 'ஒன்றுக்கும் ஆகாதவன்' என்பார், 'நானோர் தோளாச் சுரை ஒத்தல்' என்றார். "தோளாத சுரையோ தொழும்பர் செவி" என்ற அப்பர் தேவாரத்தையும் காண்க. இந்நிலையில் பயனற்றிருக்க விடுவது ஆட்கொண்ட தலைவனுக்கு அழகாகாது என்பார், 'நம்பி இத்தால் வாழ்ந்தாயே' என்றார். 'மற்றைக்கண் தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே' என்ற சுந்தரர் தேவாரத்தையும் ஒப்பிட்டுக்கொள்க. இதனால், இறைவன் கனி போன்றவன் என்பது கூறப்பட்டது. 10 கூடிக் கூடி உன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ ஊடி ஊடி உடையாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக் காடி ஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே. பதப்பொருள் : உன் அடியார் - உன் அடியார்கள், கூடிக்கூடி - சேர்ந்து சேர்ந்து, குனிப்பார் - கூத்தாடுவார், சிரிப்பார் - நகைப்பார், களிப்பார் ஆ - களிப்பாராக, வழியற்றேன் - நெறி
|