பக்கம் எண் :

திருவாசகம்
528


எச்சம்அறி வேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன்
அச்சோஎங்கள் அரனேஅரு மருந்தேஎன தமுதே
செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே.

பதப்பொருள் : எங்கள் அரசே - எங்கள் சிவபெருமானே, அருமருந்தே - அருமையான மருந்தானவனே, எனது அமுதே - என்னுடைய அமுதமானவனே, செச்சை மலர் புரை மேனியன் - வெட்சி மலரைப் போன்ற செம்மேனியையுடையவனாகியும், திருப்பெருந்துறை உறைவான் - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்றவனுமாகியும், நிச்சம் - நாடோறும், என் நெஞ்சில் மன்னி - என்னுடைய நெஞ்சத்தில் தங்கி, யான் ஆகி நின்றானே - நானேயாய்க் கலந்து நின்றவனே, நான் எச்சம் அறிவேன் - நான் எஞ்சிய பிறவற்றை அறிவேன், எனக்கு இருக்கின்றதை அறியேன் - எனக்கு இருக்கின்ற குறைபாட்டை அறியமாட்டேன்; அச்சோ - இது என்ன வியப்பு!

விளக்கம் : நித்தம் என்பது 'நிச்சம்' எனப் போலியாயிற்று. என் என்பது என என்று திரிந்தது. யானாகி நிற்றலாவது, ஆன்மாவில் அடங்கியிருந்த இறைவன் விளங்கித் தோன்றி ஆன்மாவைத் தன்னுள் அடக்கி நிற்றலாம். 'உலகியலிலும் ஆன்ம லாபத்திலும் பிறருக்குள்ள குறைகளை மட்டும் அறிந்து எனக்கு இருக்கின்ற குறைகளை அறியவில்லை' என்பார், 'எச்சம் அறிவேன் எனக்கிருக்கின்றதை அறியேன்' என்றார். 'என் அறியாமை இருந்தவாறு என்னே!' என்று வருந்திக் கூறியபடியாம்.

இதனால், பிறர் குறையை அறிவது போலத் தம் குறையையும் அறிய வேண்டுவது என்பது கூறப்பட்டது.

9

வான்பாவிய உலகத்தவர் தவமேசெய அவமே
ஊன்பாவிய உடலைச்சுமந் தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால்உனை நல்காய்என லாமே.

பதப்பொருள் : தேன் பாய் - தேன் பெருகுகின்ற, மலர் - மலர்களையுடைய, கொன்றை மன்னு - கொன்றை மலர்கள் நிறைந்து விளங்கும், திருப்பெருந்துறை உறையாய் - திருப் பெருந்துறையில் வீற்றிருப்பவனே, வான் பாவிய உலகத்தவர் - விண்ணிலே பொருந்திய உலகத்தவராகிய தேவர்களும், தவமே செய - தவத்தையே செய்துகொண்டிருக்க, அவமே - வீணே, ஊன் பாவிய உடலை - தசை பொருந்திய உடம்பை, சுமந்து - தாங்கி,