பக்கம் எண் :

திருவாசகம்
529


அடவி மரம் ஆனேன் - காட்டில் உள்ள மரம் போல ஆகிவிட்டேன், நான் பாவியன் ஆனால் - நான் இவ்வாறு பாவியாகப் போய்விட்ட பின்பு, உனை நல்காய் எனல் ஆமே - உன்னை அருளாதவன் என்று கூறுதல் கூடுமோ!

விளக்கம் : தவமாவது, நெஞ்சில் மன்னியிருக்கும் இறைவனை அறிவதற்குச் செய்யும் முயற்சியாம். 'உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினுள் உத்தமனைக் காண' என்றார் ஒளவையார். 'அவ்வாறு செய்யாமையால் பயனற்றுக் கழிகின்றேன்' என்பார், 'அவமே ஊன் பாவிய உடலைச்சுமந் தடவிமர மானேன்' என்றார். காட்டில் உள்ள மரத்தின் காய்கணி ஒருவருக்கும் பயன்படா என்க. ஆமே, ஏகாரம் எதிர்மறை, தவத்தினை முயன்று உடம்பின் பயனைப் பெற வேண்டும் என்பதாம்.

இதனால், பக்குவம் வந்தவர்களுக்கே இறைவன் அருளுவான் என்பது கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்