பக்கம் எண் :

திருவாசகம்
546


விளக்கம் : ஐவர் கோக்களை வென்றது, காமனை வென்றதைக் குறித்தது. பெருந்தேவியும் தானுமாக வீற்றிருந்தது, திருவாஞ்சியத்தில் அம்மையப்பராகச் சீர் பெற இருந்ததாம். 'சேவகன்' என்றதற்குப் பின், 'ஆயினான்' என்பது வருவித்துரைக்க நின்றது. காஞ்சியில் வாழ்ந்த சமண மன்னனால் அனுப்பபட்ட யானையை ஒற்றைச் சேவகனாக நின்று பாண்டியனுக்காக அழித்த வரலாறு ஒற்றைச் சேவகனாகியதாம். இதனைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க.

"திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
சேவக னாகித் திண்சிலை யேந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்"

என்ற கீர்த்தித்திருவகவல் அடிகளையும் காண்க.

இதனால், இறைவனது திருவருளைத் தெளிதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்