பக்கம் எண் :

திருவாசகம்
575


பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய
அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய
அற்புதம் அறியேனே.

பதப்பொருள் : மண்ணிடை நடித்து - மண்ணுலகத்தில் உண்மையுள்ளவன் போல நடித்து, பொய்யினைப் பல செய்து - செயலில் பொய்யான பல காரியங்களைச் செய்து, நான் எனது எனும் - யான் எனது என்கின்ற, மாயம் - மயக்கமாகிய பாம்பு, கடித்த வாயிலே நின்று - கடித்த வாயிலிருந்து, முன் வினை மிக - முற்காலத்துச் செய்த வினையாகிய விடமானது மிகுதலால், கழறியே திரிவேனை - புலம்பித் திரிகின்றவனும், அடியேனை - தனக்கு அடியவனுமாகிய என்னை, அப்பெருமறை தேடிய - அந்தப் பெரிய வேதங்கள் தேடியறியாத, அரும் பொருள் - அரிய பொருளான எங்கள் பெருமான், முன் நின்று பிடித்து - முன் வந்து பிடித்துக்கொண்டு, அடித்து அடித்து - பல காலும் அடித்து, அக்காரம் முன் தீற்றிய - திருவருளாகிய சர்க்கரைக்கட்டியை முன் அருந்திய, அற்புதம் அறியேன் - அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

விளக்கம் : கடித்த என்னும் குறிப்பால் மாயத்தைப் பாம்பு என்றும், வினையை விடம் என்றும் உருவகித்தல் பெறப்பட்டது. பாம்பு கடித்தால் விடம் தலைக்கேறி மயங்கிப் பிதற்றுவது போல அகங்காரத்தினாலே மயங்கிப் பிதற்றுகின்றேன் என்பார், 'மாயக் கடித்த வாயிலே நின்று முன் வினை மிகக் கழறியே திரிவேனை' என்றார். 'மாய வாய்' என இயைத்து, மாயத்தால் உண்டாக்கப்பட்ட வாய் எனக் கொள்க. இம்மயக்கத்தைத் தீர்ப்பதற்கு இறைவனாகிய விடவைத்தியன் திருவருளாகிய இனிய மருந்தினை நல்கியதை, 'அரும்பொருள் அடித்தடித்து அக்கார முன் தீற்றிய அற்புதம்' என்றார்.

இதனால், இறைவன் யான் எனது என்னும் செருக்கினை அறுக்க வல்லவன் என்பது கூறப்பட்டது,

3

பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
பொய்களே புகன்றபோய்க்
கருங்கு ழலினார் கண்களால் ஏறுண்டு
கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிவம்பிடத்
திருவொடும் அகலாதே
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.

பதப்பொருள் : பொருந்தும் - வருகின்ற, இப்பிறப்பு இறப்பு இவை - இப்பிறப்பு இறப்புகளாகிய இவற்றின் துன்பநிலையை,