பக்கம் எண் :

திருவாசகம்
634


பதப்பொருள் : என்னை முன் ஆள் உடை ஈசன் - என்னை முன்னே ஆளாகவுடைய ஈசனும், என் அத்தன் - என் தந்தையுமாகிய இறைவன், எழுந்தருளப் பெறில் - எழுந்தருளப் பெற்றால், பொன் இயலும் - பொன்னிறம் பொருந்திய, திருமேனி - திருமேனியில், வெண்ணீறு - திருவெண்ணீறு, பொலிந்திடும் ஆகாதே - விளங்கித் தோன்றுதல் ஆகாது போகுமோ? மாதவர் - பெரிய முனிவர்களுடைய, கைகள் குவிந்து - கைகள் குவியப்பெற்று, பூமழை - மலர் மாரியை, பொழிந்திடும் ஆகாதே - பெய்தல் ஆகாது போகுமோ? மின் இயல் நுண் இடையார்கள் - மின்னலைப் போன்ற நுட்பமான இடையையுடைய மாதரது, கருத்து - வஞ்சனையான எண்ணம், வெளிப்படும் ஆகாதே - வெளிப்படுதல் ஆகாது போகுமோ? வீணை முரன்று எழும் ஓசையில் - வீணையானது முழங்குதலால் உண்டாகின்ற நாதத்தைப் போல, இன்பம் - இன்பமானது, மிகுத்திடும் ஆகாதே - மிகுந்திடுதல் ஆகாது போகுமோ? தன் அடியார் அடி - அவனது அடியாரது திருவடிகள், என் தலைமீது - என்னுடைய சிரத்தின்மேல், தழைப்பன ஆகாதே - விளங்குதல் ஆகாது போகுமோ? அடியோம் - அடியோங்கள், உய - உய்தி பெறும்படி, தான் வந்து - தான் எழுந்தருளி வந்து, உடன் தலைப்படும் ஆகாதே - எங்களுடன் கலத்தல் ஆகாது போகுமோ? எங்கும் - எவ்விடத்தும், இன் இயம் நிறைந்து - இனிய வாத்தியங்கள் நிறைந்து, இனிதாக - இனிமையாக, இயம்பிடும் ஆகாதே - ஒலித்தல் ஆகாது போகுமோ?

விளக்கம் : இறைவன் செம்மேனி வெண்ணீற்றனாகக் காட்சியளிப்பவன் என்பார், 'பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே' என்றார். நுண்ணிடையார் என்றது மயக்கும் மாதரையாதலின். கருத்து என்றதற்கு வஞ்சக் கருத்து என்று பொருள் கொள்ளப்பட்டது. வீணாகானம் அமைதியான இன்பத்தைத் தருவதாகலின், அதனை இறைவன் இன்பத்திற்கு உவமை கூறினார். நாவுக்கரசரும், இறைவன் திருவடி இன்பத்திற்கு மாசில் வீணையை உவமை கூறியது அறிக. 'இன்னியம் எங்கும் நிறைந்து இனிதாக இயம்பிடும்' என்றது, தேவ வாத்தியங்கள் முழக்கப்படுதலையாம். இன்னியம் எங்கும் இயம்பதலும், மாதவர் கைகள் பூமழை பொழிதலும், திருமேனி வெண்ணீறும் பொலிதலும், ஈசன் எழுந்தருளுங்காலத்தில் உடன் நிகழ்வனவாம். ஆதலின், அவற்றை அம்முறையே இயைத்து, பின்பு தான் உடனாய் வந்து தலைப்படுதலையும், அதன் பயனாக வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுதலையும் வைத்து, அவ்வின்ப நிலையில் நுண்ணிடையாரது இன்பத்தில் வெறுப்பும், அடியாரடிக்கண் அன்பும் தோன்றுதலைப் பொருத்திப் பொருள் கொள்க.இறைவன் உடனாய் தலைப்படுதலாவது, உயிர்களைத்