பக்கம் எண் :

திருவாசகம்
635


தன்னின் வேறறச் செய்து தானேயாகக் கலத்தல். எனவே, இது சாயுச்சிய முத்தியாயிற்று.

இதனால், இறைவன் வெளிப்பட்டு அருளும் நிலை கூறப்பட்டது.

6

சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னிய சோதி தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த பராபர மாகாதே
பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
விண்ணவ ரும்அறி யாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
இந்துசி காமணி எங் களை ஆள எழுந்தரு ளப்பெறிலே.

பதப்பொருள் : இந்து சிகாமணி - சந்திரனைத் தலைமணியாக அணிந்த பெருமான், எங்களை ஆள - எங்களை ஆளும்பொருட்டு, எழுந்தருளப் பெறில் - எழுந்தருளப் பெற்றால், சொல் இயலாது - சொல்லுவதற்கு முடியாதபடி, எழு - உண்டாகின்ற, தூமணி ஓசை - தூய்மையான மணி ஓசை, சுவை தரும் ஆகாதே - இன்பத்தைத் தருதல் ஆகாது போகுமோ? துண்ணென - அதி விரைவாக, என் உளம் மன்னிய சோதி - எனது உள்ளத்தில் பொருந்திய சோதி, தொடர்ந்து எழும் ஆகாதே - இடைவிடாது வளர்தல் ஆகாது போகுமோ, பல் இயல்பு ஆய - பலவகையான, பரப்பு அற வந்த - மன அலைவு கெடும்படிவந்தருளின, பராபரம் ஆகாதே - பரம்பொருளினது பயன் உண்டாகாது போகுமோ?பண்டு அறியாத - முற்காலத்திலும் அறிந்திராத, பரானுபவங்கள் - மேலான அனுபவங்கள், பரந்து எழும் ஆகாதே - விரிந்து தோன்றுதலும் உண்டாகாது போகுமோ? வில் இயல் நல் நுதலார் மயல் - வில்லைப் போன்ற அழகிய நெற்றியையுடைய பெண்களது ஆசை போன்றவோர் ஆசை, இன்று விளைந்திடும் ஆகாதே - இப்பொழுது முடிவு உண்டாகாது போகுமோ, விண்ணவரும் அறியாத - தேவரும் அறியாத, விழுப்பொருள் - மேன்மையான பொருள், இப்பொருள் ஆகாதே - இந்தப் பொருள்தான் என்ற உணர்வு தோன்றாது போகுமோ? எல்லை இல்லாதன - வரம்பு இலாதனவாகிய, எண் குணம் ஆனவை - எண்குணங்களானவை, எய்திடும் ஆகாதே - என்னிடத்துப் பொருந்துதல் ஆகாது போகுமோ?

விளக்கம் : 'தூமணி ஓசை' என்றது அருள் நாத ஒலியையாதலாலும், அது சொல்லுள் அகப்படாது ஆதலாலும் 'சொல்லியலாதெழு தூமணி ஓசை' என்றார். மாயாநாத ஒலியே சொல்