கட்டுண்டு கிடந்த நிலையினின்றும் மீட்பித்தகையும், 'அம்மை அருளியது' என்றது, மீட்பித்த அருட்சத்தி பின் தம்மைச் சிவத்தோடு சேர்த்ததையும் குறிக்கும். 'பாசத்தில் கட்டுண்டு கிடந்த என்னை இவ்வாறு பாசத்தினின்றும் நீக்கி, சிவத்தோடு சேர்த்து அருளியது என்ன அதிசயம்!' என்று வியக்கின்றார். சூக்கும பஞ்சாக்கரத்தின் அருளப்பாடும் குறிப்பினால் விளங்கும். இதனால், திருவருளின் பெருமை கூறப்பட்டது. 9 திருவாசகவுரை முற்றிற்று. திருச்சிற்றம்பலம் |