யெனவே, ஏனைப் பரிணாமம் அவற்றொடு விரவிய அசுத்தமாயையின் காரியத்திற் கென்பதூஉம் பெறப்பட்டது. பாலினுண்டாகிய தயிர் போல முழுவதும் பரிணமித்தலும், நெய்யினுண்டாகிய புழுப்போல ஏகதேசத்திற் பரிணமித்தலுமெனப் பரிணாமம் இருவகைப்படும். அவற்றுட் பின்னையதே அசுத்தமாயையிற் கொள்ளப்படுவதூஉமென்க. விருத்தியென்பது சூக்கும பரிணாமமென்ப. நிவிர்த்தாதி கலையைப்பற்றித் திகழ்ந்திடுமஞ்சதாக என்பதற்கு, நிவிர்த்திகலையுட்பட்ட புவனவாசிகட்குத் தூலதமமாயும், பிரதிட்டையுட்பட்ட புவனவாசிகட்குத் தூலதரமாயும், வித்தையுட்பட்ட புவனவாசிகட்குத் தூலமாயும், சாந்தியுட்பட்டபுவனவாசிகட்குச் சூக்குமமாயும், சாந்தியதீதகலையுட்பட்ட புவனவாசிகட்குச் சூக்குமதரமாயும் இங்ஙனம் நால்வகைவாக்கும் ஐவகைப்படும் என்றுரைத்தலும் ஒன்று. 24 வித்தைகள் வித்தை ஈசர் சதாசிவர் என்றி வர்க்கு வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்தி ரங்கள் தத்துவம் சரீரம் போகம் கரணங்கள் தாமெ லாமும் உய்த்திடும் வைந்த வந்தான் உபாதான மாகி நின்றே. 45 | (உரை) சுத்தமாயை முதற்காரணமாவது ஈண்டுக்கூறிப்போந்த வாக்கு மாத்திரைக்கேயன்று, மந்திரேசுரர் மந்திரமயேசுரர் அணுசதாசிவர் முதலிய அபரமுத்தர்க்கு வேண்டப்படுஞ் சுத்தாத்துவாக்கள் எவற்றினுக்கும் முதற்காரணமாம். விந்துவை வைந்தவமென்றது பகுதிப்பொருள் விகுதிபெற்றது. மூவகை அணுக்க ளுக்கு முறைமையால் விந்து ஞானம் மேவின தில்லை யாகில் விளங்கிய ஞான மின்றாம் ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞான முண்டேல் சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே. 46 | (உரை) மேற் கூறிப்போந்த வாக்குகள் சவிகற்ப ஞானத்துக் கேதுவாகலால், ஈண்டுக்கூறியது சுத்தப் பிரபஞ்சம்போல வித்தைகள் வித்தையீசர் சதாசிவர் மாத்திரைக்கேயன்றி, விஞ்ஞானாகலர் பிரளயாகலர் சகலர்க்கும் ஒருதலையான் வேண்டப்படும் சவிகற்ப |