பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை44

70.

அரவமொன்(று) ஆகத்து நீநயந்து பூணேல்;
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள்;- முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண். 

27

 

71.

பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக, இவர். 

28


70. அ. சொ. பொ.: ஆகம் - உடம்பு. ‘ஒன்றும்’ என முற்றும்மை விரித்து, ‘எதனைப் பூண்டாலும் பாம்பு ஒன்றை மட்டும் பூணாதே’ என்க. ‘பாம்பொடு பழகேல்’1 என்பார் பெரியோர் ஆதலின், அஃது என்றாயினும் தீமையாகவே முடியும் என்று இரக்கின்றோம் என்பதாம், “ஒன்று” என்பது இனங் குறித்து நின்றது. நயந்து - விரும்பி. என்றதனால், ‘சிவன் பாம்பை விரும்புகின்றான்’ என்பது பெறப்படும். பரவுதல் - துதித்தல். முரண் - வலிமை. ஒன்னாதார் - பகைவர். “மற்றொன்று” என்பதும் மற்றோர் இனத்தையே குறித்தது. “பொன்னாரம்” என்பது, ஒருபொருள் குறித்த வேறு பெயராய் வந்தது. இஃது அன்பே காரணமாக, இறைவனது ஆற்றலை மறந்து, அவனுக்கு வரும் தீங்கிற்கு அஞ்சிக் கூறிய கூற்றாய் அமைந்தது. எனினும், ‘மூவெயிலும் ஓர் அம்பால் எய்தான்’ என அவனது அளவிலாற்றல் குறிக்கப்பட்டது.

71. அ. சொ. பொ.: “இவர்” என்றது இறைவரை அண்மையில் வைத்துச் சுட்டியது. இதன்பின், “கோள் நாகம்” என்பதைக் கூட்டி, இரண்டையும் முதலில் வைத்து, ‘ஒன்று பூண் ஆகப் புனைந்து’ ஒன்று அதளின்மேல் மிளிர நாண் ஆக நன்கு அமைத்து, (ஒன்று) முடிமேல் சூடுவதும் ஆகிய இவையெல்லாம் பொறியிலியேற்கு என முடிவதாக’ என இயைத்துப் பொருள் கொள்க. கோள் - கொடுமை. பூண் - அணிகலம். பொங்கு - அழகு மிகுந்த. அதள் - புலித் தோல்; இஃது உடுக்கையாக உடுத்தப்பட்டது. ரூண், அரைநாண். “பொறியிலியேற்கு” எனத் தம்மையே குறித்தாராயினும், ‘தம்போலியர்க்கு’ என்றலே கருத்து என்க. பொன் முடி - பொன்போலும் முடி; சடைமுடி. பொறி - அறிவு. னுன் - என்ன பொருள். முடிவதாக - முடிதற் பொருட்டு. “ஒன்று” என்பதை, பொன்முடிக்கும் கூட்டுக. அஃதாவது, ‘விளக்குதற் பொருட்டு’ என்றதாம். ‘யான் அன்புடையேன்; ஆயினும் அறிவிலேன்; ஆகவே, இவர் செய்வன எல்லாம் என் போலியர்க்கு என்ன


1. ஆத்தி சூடி