கலாபே தத்த கடுவிடம் எய்தி அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும் தப்பா மேதாம் பிடித்தது சலியாத் 60. தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுள முருகி அழுதுடல் கம்பித் தாடியும் அலறியும் பாடியும் பரவியுங் கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனும் படியே யாகிநல் லிடையறா அன்பிற் 65. பசுமரத் தாணி அறைந்தாற் போலக் கசிவது பெருகிக் கடலென மறுகி அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச் சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை 70. பூணது வாகக் கோணுதல் இன்றிச் சதிரிழந் தறிமால் கொண்டு சாரும் கதியது பரம அதிசய மாகக் கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் தெய்வங் கனவிலு நினையா 75. தருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி அருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப் பிறிவினை யறியா நிழலது போல முன்பின் னாகி முனியா தத்திசை 80. என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி அன்பெனும் ஆறு கரையது புரள நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதய மலரக் 85. கண்களி கூர நுண்துளி யரும்பச் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி
|