பக்கம் எண் :

திருமுறை]12. திரைலோக்கிய சுந்தரம்83


125, 
 

மைஞ்ஞின்ற குழலாள்தன் மனம்தரவும் வளைதாரா
திஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்த தியார்செய்தார் !
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும்
                                    [பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய
                                 [சுந்தரனே.   (4)
 

126.

நீவாரா தொழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால் ;
ஆவாஎன் றருள்புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும்
தேவாதென் பொழிற்கோடைத் திரைலோக்கிய
                                 [சுந்தரனே.   (5)
 

இங்குக்    குறிக்கப்பட்டன என்க. வம்பு அளிந்த-புதிதாய்ப்   பழுத்த;
ஆணவ நீக்கத்தில் விளங்குதலால் இறையின்பம் புதிதாய்த்  தோன்றல்
பற்றி  இவ்வாறு  கூறப்பட்டது. மருந்தாதல், ‘பிறவிப் பிணிக்கு’  என்க.
‘நல் பளிங்கு’ என இயையும். வளர்-ஒளி மிக்க. மூன்று  கண்களையும்,
செம்மையையும்  உடைய  பளிங்கு,  சிவபெருமானுக்கு   இல்பொருள்
உவமையாய் வந்தது. பின்னிரண்டடிகளை முதலில் வைத்து,  இறுதியில்
‘இவட்கு அருள வேண்டும்’ என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

125. இத் திருப்பாட்டில்,நகாரங்கட்கெல்லாம்,ஞகாரங்கள் போலியாய்
வந்தன.இவ்வாறு வருதலை, ‘‘செய்ஞ்ஞின்ற நீலம்’(திருமுறை-4-80.5.)
என்னும்  அப்பர்  திருமொழியிற்  காண்க.  மை நின்ற-கருமை நிறம்
பொருந்திய   ;  இனி  ‘மேகம்  நின்றது  போன்ற’  என்றும்  ஆம்.
‘திரைலோக்கிய  சுந்தரன்,  தனக்குத்  தன்  உயிர்போன்ற மனத்தைக்
கொடுத்தவட்கு,  அவளது  வளையையும்  திரும்பத்  தருகின்றிலன் ;
இதுபோலும்  நன்றியில்லாத  செயலை  இதற்குமுன்  யார் செய்தார் ;
ஒருவரும்   செய்திலர்.  அதனால்,  இவன்  மெய்ம்மை  பொருந்திய
அன்பராயினார்க்குத்     தானும்     மெய்ம்மையான     அருளில்
பொருந்தவேண்டிய  நன்றியறியும்  பண்பு  இல்லாதவன் ஆகின்றான்’
எனப்  பழித்தவாறு,  காதல்  மிகுதியாற்  கூறினமையின், இப் பழிப்பு
அமைவதாயிற்று.       இந்        நின்ற-இங்கு         நிற்கின்ற.
கோவணவன்-கோவணமாக உடுத்த உடையை யுடையவன்.

126. நீ  வாராதொழிந்தாலும்-நீ  இவள்பால்  வாராவிடினும்.‘ஏழை
நின்பாலே விழுந்து’ என மாற்றி, ‘‘விழுந்து’’