31


நாட்டுத்    தண்டலை;    பாண்டிகுலாசனி   வளநாட்டு   விளநாட்டு
உத்தமசீலி சதுர்வேதிமங்கலம், சோழமகாதேவி சதுர்வேதிமங்கலம்;

இடையாற்றுநாட்டு  இடையாற்றுமங்கலம்; நித்த விநோத வளநாட்டு
நல்லூர்நாட்டு   நல்லூராகிய  பஞ்சவன்மகாதேவி  சதுர்வேதிமங்கலம்;
ஆவூர்க்     கூற்றத்து     இரும்புதலாகிய   மனுகுல    சூளாமணி
சதுர்வேதிமங்கலம்,     விளத்தூர்;     முடிச்சோணாட்டு    ஜனநாத
சதுர்வேதிமங்கலம், சிற்றின்வாழாகிய பரமேஸ்வர சதுர்வேதிமங்கலம்;

வெண்ணிக்       கூற்றத்துப்     பூவனூராகிய     அவனிகேசரி
சதுர்வேதிமங்கலம்,   பெருநங்கை   மங்கலம்;   பாம்புணிக்கூற்றத்துச்
சிற்றம்பர்,  என்னும் ஊரார்கள் ஆவர். இவர்களின்  தொகை 125-க்கு
மேற்பட்டதாகும்.   (   சில   இடங்களில்   கல்வெட்டுப்  பொறிந்து
போய்விட்டதால்   சரியான   எண்ணிக்கையை   இங்கே   குறிப்பிட
முடியவில்லை.)  இவர்களுக்கு  ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொருவருக்கும்
நூற்றுக்  கலநெல்  சம்பளம்  கொடுக்கப்பட்டு  வந்தது.  இவர்களுக்கு
இச்சம்பளம்  இவர்கள்  எந்த  ஊர்களிலிருந்து  வந்தார்களோ அந்த
ஊர்களிலேயே கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.

நுந்தாவிளக்குகளுக்கு அளிக்கப்பெற்ற நிவந்தம்:

நூந்தா     விளக்கு   என்பது  தூண்டாத  விளக்காகும்.   இதை
ஆங்கிலத்தில்  Perpetual  lamp  என்பர். இது நந்தாவிளக்கென்றும்,
நொந்தாவிளக்கென்றும்,  கூறப்பெறும், ‘நந்தா விளக்கனைய நாயகமே’
என்பது  கம்பராமாயணத்தொடர்.  [நுந்தா + தூண்டாத] நுந்தாவொண்
சுடரே_  தேவாரம்,  இத்தகைய விளக்கு ஒன்றுக்கு நாய்வாய் (நிசதம்)
உழக்குநெய்  எரிப்பதற்கு  ஆடாயின்  96  ஆகவும்,  பசுவாயின் 48
ஆகவும்,   எருமையாயின்   16   ஆகவும்   கொடுப்பது   வழக்கம்.
கல்வெட்டுக்களில்     இவ்வாடுகளைக்     குறிக்க    வந்தபொழுது
‘சாவாமூவாப்பேராடு’    எனக்   குறிக்கப்பெற்றிருக்கும்.  சாவாமூவா
என்றால்  சாவதும்  இல்லை.  கிழவுத்தன்மை  அடைவதும்  இல்லை.
எனவே  இனம் பெருகிக்கொண்டிருக்கும் என்பது பொருள்.  இவ்வாடு
முதலியவைகளை  இடையர்களிடம் கொடுப்பது வழக்கம். அவர்களும்
நாள்தோறும்   நெய்   அளந்து   வந்தனர்.   இவ்வாடுமாடுகளுக்குக்
கால்மாடுகள் எனப் பெயர். கால்மாடு என்றால் பசு என்று சென்னைப்
பல்கலைக்கழக அகராதியில் குறித்திருப்பது