"வந்துமுன் னெய்தித் தாமுன் செய்தமா தவத்தி னன்மை நந்துநம் பாண்டார் நம்பி ஞானபோ னகர்பொற் பாதங் கந்தவார் கழலி னார்பொற் கரகநீர் எடுத்து வார்ப்பப் புந்தியா னினைதி யானம் புரிசடை யானென் றுன்னி." (12. சம்பந்தர், 1233.) அத் தவ நிலைக்குச் சிவனினைவு மறவாமை வேண்டும். அதற்குரிய வுறுப்பு எட்டென்ப. அவை தீ தகற்றல், நன்றாற்றல், இருக்கை, வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல் என்ப. இவ் வெண்வகைப் பயிற்சியுடையார் இறைநிறைவில் அழுந்தியிருக்கும் நொசிப்புநிலையினை எய்துவர். நொசிப்பு எனினும் சமாதி எனினும் ஒன்றே. அத்தகை ஒழுகலாற்றினர் அவற்றின் பெறுபேறுகளை ஈண்டே எய்துவர். அதன்மேல் எண்பெரும் சித்தியினையும் எய்துவர். உயிர்ப்புப் பயிற்சியால் உடையான் மாட்டுக் காதலுண்டாகும். அதனால் உடல் திடமுடன் நிலைக்கும். அதற்கு வேண்டும் சக்கர வழிபாட்டுப் பயிற்சி எய்தும். வாழ்நாள் தங்கலும் மங்கலும் ஆகிய முற்குறி ஆய்வுகளுண்டாம். அதன் மேல் உயிர்ப்புச்செல்லும் ஓட்டமுறையா லுண்மை கண்டுணர்வர். செல்லும் வழிக்குச் செல்லாச் சூலத்துணைகொள்வர். உயிர்ப்புப் பயிற்சியால் பெறுதற்குரிய செயிர்தீர் நலங்களுணடாம். உள் நீரைமாற்றி அமிழ்தாக்குவர். திங்கட் கலையில் மங்காது திளைத்துத் சிவமாவர். இதுவே மெய்யின்பமாகும். இன்பம் என்பது உடலை உறுதியாக வைத்துக்கொண்டு உள்ளத்தை வள்ளற்பெருமானாகிய சிவன் திருவடிக்கண் பள்ளத்து வெள்ளம்போற் பதிய வைத்து இல்வாழ்க்கைக்கண் நல்வாழ்வு பெறுவதாகும். நாயன்மார் திருவரலாறுகள் பலவும் அதனை நன்கு வலியுறுத்தும். அவ் வுண்மைவரும் திருமுறைத் திருப்பாட்டுக்களானும் உணர்க : "தென்னாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளான் மின்னாருங் கொடிமருங்குற் பரவையெனும் மெல்லியல்தன் பொன்னாரு முலையோங்கற் புணர்குவடே சார்வாகப் பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார். தன்னையா ளுடையபிரான் சரணார விந்தமலர் சென்னியிலும் சிந்தையிலு மலர்வித்துத் திருப்பதிகம் பன்னுதமிழ்த் தொடைமாலை பலசாத்திப் பரவையெனு மின்னிடையா ளுடன்கூடி விளையாடிச் செல்கின்றார்." (12. தடுத்தாட்கொண்ட, 181 - 2.) நான்காம் தந்திரம் இஃது ஐஞ்ஞூற்றுமுப்பது திருப்பாட்டுக்களையுடையது. அசபை முதலாக நவாக்கரி சக்கரம் ஈறாகப் பதின்மூன்று பிரிவுகளையுடையது. வீடாவது பொருளிழப்பன்று; தன்னிழப்பாகும். தன்னிழப்பென்பது தன்னைச்
|