பக்கம் எண் :

1323
 

"திருமந் திரமே சிவகதிக்கு வித்தாம்
திருமந் திரமே சிவமாம் - அருமந்த
புந்திக்கு ளேநினைந்து போற்றுமடி யார்தமக்குச்
சந்திக்கும் தற்பரமே தான்."

(ஊ)

- பாடினவர் பெயர் தெரியவில்லை.

(அ) திருமூலர் காலத்தில் தமிழ் நாட்டெல்லை

"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பவ்வத்தின் குடக்கும்."

- புறநானூறு.

என்ற புறநானூற்றுச் செய்யுளின்படி, தமிழ்நாடானது 8000 வருடங்களின்முன் வடக்கே பனிமலையாகிய இமயமலை வரைக்கும், தெற்கே உருவத்திற் சிறந்த குமரித் தெய்வத்தின் கோயிலுக்கும் தெற்கே இடைச்சங்கம் இருந்த கபாடபுரத்தைச் சேர்ந்த நாட்டின் வரைக்கும், கிழக்கே இயற்கையாய் அமையாமல் சகரர்களால் தோண்டப்பட்ட வங்கக் கடல் வரைக்கும், மேற்கே தொன்று தொட்டுள்ள, தற்காலம் அரபிக்கடல் என்று வழங்கப்படும் பழங்கடல் வரைக்கும் பரவி இருந்தது.

இமய முதல் குமரிவரை ஒரு மொழிவைத் துலகாண்ட சோழன் மணக்கிள்ளி நற்சோணையின் மகன் சேரன் செங்குட்டுவன்" எனச் சிலப்பதிகாரத்தில் கூறுகிறபடியால், கி. பி. இரண்டாம் நூற்றாண்டுவரையும் தமிழ்மொழிக்கு வட எல்லை இமயமலையாகவே இருந்தது.

அதன் பிறகுதான் தமிழ் எல்லை குறுக ஆரம்பித்தது.

(ஆ) திருமூலர் நந்தியெம்பெருமான் மாணாக்கர்களில்
ஒருவர் என்பது

தமிழ்நாட்டின் வட எல்லையாகிய இமயமலையின் சிகரங்களில் சிறந்த கயிலாயத்தின் (Mount Kailas) திருக்கோயிலுக்கு முதற்பெரு நாயகமாகி, இந்திரன், மால், அயன் முதலாம் : இமயவர்க்கு1 நெறியருளும் நந்தியெம் பெருமானுடைய திருவருள் பெற்ற மாணாக்கர்கள் எண்மர். அவராவார்,

"நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடில்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோடு எண்மரு மாமே."

- தமிழ்மூவாயிரம்.


1. இமயவர் - இமயமலை வாசிகள்.