பக்கம் எண் :

1322
 

2. திருமூலநாயனார் வரலாறு

"வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கு மடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே."

(அ)

- திருத்தொண்டத் தொகை.

"குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல னாகின்ற அங்கணனே ."

(ஆ)

- திருவந்தாதி.

"..................முத்தமிழை - ஆறாம்
திருஞான சம்பந்தர் செய்ய கலிக்காமர்
அருண்மூலர் தண்டி யடிகள் - வருமூர்க்கர்
சோமாசி மாறனார்........"

(இ)

- திருநாமக்கோவை.

"கயிலாயத் தொருசித்தர் பொதியிற் சேர்வார்
காவிரிசூழ் சாத்தனூர் கருது மூலன்
பயிலாநோ யுடன்வீயத் துயர நீடும்
பசுக்களைக்கண்டு அவனுடலில் பாய்ந்து போத
அயலாகப் பண்டையுடல் அருளான் மேவி
ஆவடுதண் டுறையாண்டுக் கொருபா வாகக்
குயிலாரும் அரசடியி லிருந்து கூறிக்
கோதிலா வடகயிலை குறுகி னாரே."

(ஈ)

- திருத்தொண்டர் புராண சாரம்.

"திருமூல தேவனையே சிந்தை செய்வார்க்குக்
கருமூல மில்லையே காண்."

(உ)

- பாடினவர் பெயர் தெரியலில்லை.