பக்கம் எண் :

1321
 

ஆதலின் பாயிரச் செய்யுள்களுக்கு உரை எழுதுவதன் முன்னம் பாயிரம் இன்னது என்றும், அதில் கூறப்பட்ட அறுவகை வாழ்த்துச் செய்யுள்கள் இன்னவை யென்றும் தெரிந்துகொள்ள வேண்டியிருத்தலால், அவைகளைப்பற்றி ஈண்டு விரிவாக எழுத நேர்ந்தது.

ஆகமநூலைத் தமிழ் உலகுக்குப் பாடி உபகரிக்க வந்தவர் ஆனதால் நாயனார் நூன்முறைப்படி பாயிரமுரைத்து நூலைத் தொடங்கியுள்ளார் என்பது தெளிவாகின்றது.